ADVERTISEMENT

UAE: துபாய் நைட் கிளப்பில் தமிழ் பெண்ணை ஆபாச நடனமாட வைத்த அவலம்.. நடந்தது என்ன..?

Published: 15 Aug 2022, 9:25 PM |
Updated: 15 Aug 2022, 9:25 PM |
Posted By: admin

தமிழ்நாட்டின் திருச்சியைச் சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் நிஷா. இவரது கணவர், 2018இல் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, பொருளாதார ரீதியாக அந்த பெண் மிகவும் சிரமப்பட்டுள்ளார். தனது இரண்டு குழந்தைகளை வளர்க்க முடியாமல் தவித்த அவர், தமிழ் சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஆக வேலை பார்த்துள்ளார்.

ADVERTISEMENT

கொரோனா கால சிக்கல்களால் மீள முடியாத துயரத்துக்குச் சென்ற அவருக்கு, உதவுவதாகக் கூறி அவரது நண்பர் ஒருவர் துபாயில் கலை நிகழ்ச்சிகளில் நடனமாடும் வேலைக்கு தன்னை அனுப்பியதாக நிஷா கூறினார்.

இது குறித்து  BBC தமிழ் செய்தி நிறுவனத்திற்கு நிஷா கூறுகையில், “தினமும் எனக்கு ஏஜென்ட் மூலமாக அச்சுறுத்தல்கள் வருகின்றன. எனது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. என்னை யாரோ கண்காணிக்கிறார்கள், பின்தொடருகிறார்கள் என்று தோன்றுகிறது. என் புகார் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். எனக்கு பாஸ்போர்ட், விசா என எல்லாவற்றையும் தயார் செய்து கொடுத்தது ஏஜென்ட் ஜமுகா என்பவர். இரண்டு ஆண்டுகளாக எனக்கு அவர் அறிமுகமாகியிருந்தார். குடும்ப நண்பர் போல பழகியதால் எனக்கு அவர் மீது சந்தேகம் வரவில்லை. ஆனால், நான் துபாய் சென்ற பின்னர்தான் நைட் கிளப்களில் ஆபாச நடனம் ஆடும் வேலைக்காக என்னை அனுப்பியுள்ளார்கள் என்று தெரிந்தது. நான் மிகவும் துடித்துப் போனேன். என்னை துபாய்க்கு அனுப்பும் முன்னர், ரூ.50 ஆயிரம் கொடுத்து துணி, மேக்அப் சாதனங்கள் வாங்குமாறு சொன்னார்கள். என் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்ற ஆசையில்தான் வந்தேன். ஆனால் என்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி விட்டார்கள்” என்கிறார் நிஷா.

ADVERTISEMENT

“நைட் கிளப் நடனத்தில் ஆட வேண்டும் என வற்புறுத்தினார்கள். அங்கு யாரிடமும் உதவி கேட்கமுடியவில்லை. நான் அணிந்திருந்த உடையை மாற்றி டூ பீஸ் ஆடை அணிய கட்டாயப்படுத்தினார்கள். சித்தரவதை செய்தார்கள். நான் மறுத்தவுடன் என்னை அடித்தார்கள். துபாய் சென்றதில் இருந்து மன வருத்தத்தில் சாப்பிடவில்லை என்பதால் உடல் சரியில்லாமல் சென்றது. பின்னர், மீண்டும் சென்னைக்கு வந்து விடவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எனக்கு இருந்தது. எப்படி தப்பிப்பது என்று தெரியவில்லை. தினமும் ஏஜென்ட்டுக்கு போன் செய்தேன். முதலில் எனக்கு பதில் சொன்னவர்கள், பிறகு என்னை அச்சுறுத்தினார்கள். என் குடும்பத்தில் என் வேலையை பற்றி சொல்லி விடுவேன் என்றும் என் குழந்தைகளிடம் சொல்வதாகவும் சொன்னதால் மிகவும் பயந்தேன்” என்கிறார் நிஷா.

தந்தையின் இறப்பு காரணமாக, பார் ஓனரிடம் விடுமுறை கேட்டதாகக் கூறும் நிஷா, மீண்டும் துபாய் வந்து விடுவதாக வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்று தான் கட்டாயப்படுத்தபட்டதாக சொல்கிறார். ஏஜென்ட் சொல்வது போல மெசேஜ் அனுப்பியதால்தான் சென்னைக்கு திரும்பி வர முடிந்தது என்கிறார். நான் விமான நிலையம் வந்ததும், ஏஜென்ட்கள் என்னை துரத்தினார்கள். நான் என் நண்பர்களின் உதவியால் உயிர் பிழைத்தேன் என்றார் நிஷா.

ADVERTISEMENT