ADVERTISEMENT

UAE: குடியிருப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தக்கூடிய 7 இலவச மற்றும் கட்டண ஆப்கள்..!

Published: 18 Aug 2022, 7:59 AM |
Updated: 18 Aug 2022, 8:02 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக மக்கள்தொகையில் சுமார் 90 சதவீதம் பேர் வெளிநாட்டவர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலும் தங்கள் சொந்த நாடுகளில் உள்ள தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு தொடர்புக்கொள்ள இலவச இணைய அழைப்பாக ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்வதையே நம்பியுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் (VoIP) தொழில்நுட்பம், பயனர்கள் பாரம்பரிய தொலைபேசி லேண்ட்லைன்களுக்குப் பதிலாக பிராட்பேண்ட் இணைய இணைப்பைப் பயன்படுத்தி வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளைச் செய்ய அனுமதித்துள்ளது. வளைகுடாவில், இலவச வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்பு ஆப்களை பயன்படுத்தவும் பதிவிறக்கவும் அதிகமானோர் (VPNகளை) பயன்படுத்துகின்றனர். 2021 ஆம் ஆண்டின் ஐக்கிய அரபு அமீரக ஆணைச் சட்ட எண் (34) இன் படி, VPN தவறாகப் பயன்படுத்தினால் 2 மில்லியன் திர்ஹம்ஸ் வரை அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டம் உள்ளது.

மேலும், அமீரகத்தின் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களான Etisalat மற்றும் du ஆகியவை GoChat, Botim மற்றும் Voico ஆகியவற்றிற்கான தினசரி மற்றும் மாதாந்திர இணைய அழைப்புத் திட்டங்களை தற்போது வழங்குகின்றன, அதன் ரீசார்ச் கட்டணமாக நாளொன்றுக்கு 5 திர்ஹம்ஸில் இருந்து தொடங்குகின்றன.

ADVERTISEMENT

வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்புகளைச் செய்ய குடியிருப்பாளர்கள் பயன்படுத்தக்கூடிய இலவச மற்றும் கட்டண இணைய அழைப்பு ஆப்களின் பட்டியல் கீழே உள்ளது.
GO CHAT
BOTIM
SKYPE BUSINESSES
VOICO
MICROSOFT TEAMS
ZOOM
GOOGLE MEET