சுஹைல் நட்சத்திரம் அமீரகம் மற்றும் மத்திய அரேபியாவில் தென்கிழக்கு அடிவானத்தில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி விடியற்காலையில் காணப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் வானிலை ஆய்வாளர் தெரிவித்தார். சுஹைல் நட்சத்திரம் என்பது அரபு உலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திரமாகும், ஏனெனில் இது கோடையின் முடிவையும், பாலைவனத்தில் குளிர்ந்த நாட்களின் தொடக்கத்தையும் குறிக்கிறது.
இந்த நிலையில் சில பகுதிகளில் அதிகபட்சமாகத் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் தாக்கிய பிறகு, சூரியனிலிருந்து பூமியின் தூரத்தின் காரணமாக, ஆகஸ்ட் 24 முதல் வெப்பநிலை குறையத் தொடங்குகிறது. வானியல் மற்றும் விண்வெளி அறிவியலுக்கான அரபு ஒன்றியத்தின் உறுப்பினரான இப்ராஹிம் அல் ஜர்வான் ட்விட்டரில், சுஹைல் நட்சத்திரம் வானிலை மாற்றத்தைக் குறிக்கிறது, அரேபிய வளைகுடாவில் உள்ள பலர் இந்த மாபெரும் நட்சத்திரத்தின் தோற்றத்திற்காக காத்திருக்கிறார்கள்.
“சுஹைல் நட்சத்திரம் லேசான வானிலை மற்றும் குறைந்த வெப்பநிலையுடன் அதிக ஈரப்பதத்துடன் காற்று வீசுக்கூடும், பழங்காலத்திலிருந்தே, அரேபிய தீபகற்பத்தில் உள்ள மக்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர், ஏனெனில் அவை இரவு மற்றும் பகலில் தங்கள் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தினர். இதனை ஆண்டு பருவங்களின் தொடக்கம், மழையின் நேரங்கள், வெப்பம் மற்றும் குளிர்ந்த காலநிலை ஆகியவற்றின் மூலம் மக்கள் கணித்துக்கொள்கின்றனர்” என்று அல் ஜார்வான் கூறினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தோற்றப்படும் சுஹைலின் நட்சத்திரத்தின் தோற்றம் மிகுதியாகவும் எல்லாவற்றுக்கும் நல்ல முன்னோடி என்று குடியிருப்பாளர்கள் நம்புகிறார்கள். கடந்த கால அமீரக மக்கள் தங்கள் மீன்பிடித்தல், முத்து வேட்டை மற்றும் விவசாய நடவடிக்கைகளை சுஹைல் நட்சத்திரத்தின் மூலம் அடிப்படையாகக் கொண்டுள்ளனர்.