ADVERTISEMENT

UAE: துபாயில் DEWA கட்டணம் கூடுதலாக வருகிறதா..? குறைப்பது எப்படி..?

Published: 20 Aug 2022, 8:13 PM |
Updated: 20 Aug 2022, 8:13 PM |
Posted By: admin

அமீரகத்தில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், மின்சாரப் பயன்பாட்டில் அதிகரிப்பு ஏற்படுவதை நீங்கள் கவனிக்கலாம். இருப்பினும், துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையமான (DEWA) நுகர்வு மதிப்பீட்டுக் கருவியைப் பயன்படுத்தி இந்த கோடையில் உங்கள் பயன்பாட்டுக் கட்டணங்களைக் குறைக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த மதிப்பீட்டுக் கருவியானது வாடிக்கையாளர்களின் மின் நுகர்வு அளவை வீட்டிலேயே கண்காணிக்க உதவுகிறது.

எனவே, இந்த கோடையில் அதிக பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தைக் குறைக்க சில பயனுள்ள குறிப்புகள் மற்றும் ‘நுகர்வு மதிப்பீட்டு கருவியை’ எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்:

ADVERTISEMENT

தேவா நுகர்வு மதிப்பீட்டு கருவியை எவ்வாறு பயன்படுத்துவது:

நுகர்வு மதிப்பீட்டுக் கருவியானது மக்கள் தங்கள் நீர் மற்றும் மின்சார நுகர்வு முறைகளைப் புரிந்துகொள்வதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால் தங்கள் பயன்பாட்டுக் கட்டணத்தைக் குறைப்பதில் பணியாற்ற முடியும். மதிப்பீட்டுக் கருவியிலிருந்து பயனடைய, கீழ் குறிப்பிட்டுள்ள முறைப்படி செய்யவும்.

  1. இங்கு குறிப்பிட்டுள்ளா லிங்கிற்கு செல்லவும் – https://www.dewa.gov.ae/en/about-us/strategic-initiatives/consumption-assessment-tool
  2. ‘‘Start now’ என்பதைக் கிளிக் செய்யவும்
  3. உங்கள் UAE பாஸ் அல்லது தேவா ஐடியைப் பயன்படுத்தி உள்நுழையுமாறு கேட்கப்படும்.
  4. இணையதளம் உங்களை நுகர்வு மதிப்பீட்டுக் கருவிக்கு அழைத்துச் செல்லும். ‘Start the assessment’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. இந்த இணையதளம், விரிவான கேள்வித்தாள் மூலம் உங்களை அழைத்துச் செல்லும், இது உங்கள் குடியிருப்பு எண், உங்கள் வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள உபகரணங்கள், அறைகள், சமையலறை மற்றும் குளியலறை மற்றும் உங்கள் நுகர்வு முறைகள் பற்றிய விவரங்களைக் கேட்கும். எடுத்துக்காட்டாக, பயனர்கள் தங்களுடைய குடியிருப்புப் பிரிவில் எத்தனை படுக்கையறைகள் உள்ளன மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் அல்லது வில்லாவில் வசிக்கிறார்களா என்ற விவரங்களை முதலில் வழங்குமாறு கேட்கப்படும்.
  6. உங்கள் நுகர்வு மற்றும் எந்தச் செயல்பாடு அதிக மின்சாரம் மற்றும் தண்ணீரைப் பயன்படுத்துகிறது என்பது பற்றிய விவரம் உங்களுக்கு வழங்கப்படும்.
  7. கணக்கெடுப்பின் பதில்களின் அடிப்படையில், உங்கள் ஆற்றல் நுகர்வைக் குறைக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய தனிப் பயனாக்கப்பட்ட உதவிக்குறிப்புகள் உங்களுக்கு வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, உங்கள் வில்லாவில் மாடி காலியாக இருந்தால், உங்கள் மின் கட்டணத்தைக் குறைக்க சோலார் பேனல்களை நிறுவ DEWA பரிந்துரைக்கிறது. இதேபோல் நீங்கள் பயன்படுத்தும் லைட்டிங் விருப்பங்களின் வகையைப் பொறுத்தும் DEWA பரிந்துரைகிறது.

உங்கள் தேவா பில் குறைக்க ஆற்றல் சேமிப்பு குறிப்புகள்:

DEWA-வின் படி ஆற்றலைச் சேமிப்பதற்கான சில பொதுவான குறிப்புகள் இங்கே:

அறைகள்:

  • ஏசி இயக்கப்பட்டிருக்கும் போது உங்கள் வீட்டின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அனைத்தும் சரியாக மூடப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
  • காற்றுச்சீரமைப்பு வடிகட்டிகளை சீரான இடைவெளியில் மாற்றவும்.
  • கோடையில் உங்கள் ஏசிகளை 24cக்கு அமைக்கவும், அதை ஆட்டோ மொடில் அமைக்கவும்.
  • உங்கள் மொபைல் ஃபோன் சார்ஜ் செய்த பிறகு ஃபளக்கிலிருந்து கழற்றி விடுங்கள்.
  • பெர்சனல் கம்ப்யூட்டர்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் சார்ஜர்கள் பயன்பாட்டில் இல்லாதபோது அவற்றை கழற்றுவுடுவது சிறந்தது. பெரும்பாலான எலக்ட்ரானிக்ஸில் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டாலும் மின்சாரம் இயங்கும்.
  • உங்கள் மின் விளக்குகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். அழுக்கு மற்றும் க்ரீஸ் விளக்குகள் ஒளி வெளியீட்டை சுமார் 10 சதவீதம் குறைக்கலாம்.

குளியலறைகள்:

  • நீண்ட நேரம் குளிப்பதை தவிர்க்கவும். இதனால், 150 கலோன்ஸ் தண்ணீர் வரை சேமிக்கவும்.
  • ஷேவ் செய்யும் போது குழாயை மூடி வைத்தால் வாரத்திற்கு 100 கேலன்களுக்கு மேல் சேமிக்கலாம்.
  • ஹீட்டர்களின் நீர் ஓட்டத்தைக் குறைக்கும் கருவிகளைக் கொண்டு மாற்றவும்.
  • கோடையில் வாட்டர் ஹீட்டர்களை உபயோகிக்க வேண்டாம். அந்த நேரத்தில் தண்ணீர் இயற்கையாகவே வெப்பமடைகிறது.

சமையலறை:

  • குளிர்சாதன பெட்டி கதவுகள் திறக்கப்படுவதை குறைக்கவும்.
  • சமையல் நேரம் முடிவதற்கு 5 முதல் 10 நிமிடங்களுக்கு முன் அடுப்பை அணைக்கவும்.
  • உங்கள் குளிர்சாதன பெட்டி அடிக்கடி சுத்தம் செய்யவும்.

சலவை (அயன்):

  • ஒரு அயன் மிசின் வாங்கும் போது, ​​உயர் திறன் கொண்டதிய வாங்கவும்.
  • உங்கள் துணிகளை வெந்நீரை விட வெதுவெதுப்பான நிலையில் துவைக்கவும். இது மின்சார உபயோகத்தை 50 சதவீதம் மிச்சப்படுத்தும்.

உங்கள் துணிகளை டிரையரில் உலர்த்தவும். அது மின்சார உபயோகத்தை 15 சதவீதம் மிச்சப்படுத்தும்.

ADVERTISEMENT