ADVERTISEMENT

UAE: துபாய் விமான நிலையம் அருகே விபத்து.. வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அறிவுரை..!

Published: 23 Aug 2022, 9:16 AM |
Updated: 23 Aug 2022, 9:16 AM |
Posted By: admin

துபாய் விமான நிலையம் சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் துபாய் காவல்துறை ட்வீட்டரில் பதிவிட்டுள்ளது. சரக்கு கிராம (freight village) சுரங்கப்பாதையில் இருந்து மணிக்கூண்டு ரவுண்டானா நோக்கி செல்லும் பாதையில் வாகனங்கள் மோதிக்கொண்டு விபத்து நிகழ்ந்துள்ளதாக பதிவில் தெரிவித்துள்ளது. எனவே அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பிருப்பதாக வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT