ADVERTISEMENT

துபாய்: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அமீரக கிளை சார்பாக நடத்தப்பட்ட இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி..!!

Published: 24 Aug 2022, 11:16 AM |
Updated: 24 Aug 2022, 11:31 AM |
Posted By: admin

துபாயில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அமீரக கிளையின் சார்பாக இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று அதன் கிளை நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடந்துள்ளது.

ADVERTISEMENT

வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புரட்சிகலைஞர் விஜயகாந்தின் பிறந்த நாளான ஆகஸ்ட் 21 ம் தேதி அன்று துபாயில் உள்ள லத்திபா மருத்துவமனையில் இரத்ததானம் வழங்கியும் மற்றும் கேக் வெட்டியும் கொண்டாடப்பட்டதாக அமீரக கிளையின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இவ்விழாவிற்கு நெல்லை  R.தவசி முருகன்  தலைமையும், R.சதீஷ்குமார் முன்னிலையும் வகித்துள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தேமுதிக அமீரக பிரிவு நிர்வாகிகள் S.அம்ஜத்அலி, I.காமராஜ், A.சாகுல்ஹமீத், A.தீபக், C.சகாப்தம் மணி மற்றும் துணைவியார் நாகவள்ளி மற்றும் அமீரக கிளை உறுப்பினர்கள் S.விஜய், S.A.சாந்தகுமார், நாகராஜ், A.பாசிம், M.நியாஸ் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்துள்ளனர்.

ADVERTISEMENT

இறுதியாக இந்த விழாவினை ஏற்பாடு செய்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அமீரக கிளையின் நிர்வாகிகளில் ஒருவரான V.ராஜசேகர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.