ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் பெற்றோர்கள் பல்கலைக்கழகத்தில் படிக்கும் தங்கள் மகன்களுக்கு 25 வயது வரை ஸ்பான்சர் செய்ய அனுமதியளிக்கிறது. இது செப்டம்பர் 5 முதல் அமலுக்கு வரவுள்ளது. புதிய விதிகளின்படி, திருமணமாகாத மகள்கள் மற்றும் ஊனமுற்ற குழந்தைகளுக்கு அவர்களின் வயதைப் பொருட்படுத்தாமல் விசா வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த விதி மாற்றங்கள் ஏப்ரல் 2022 அன்று அமீரக அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.
குடும்ப குடியிருப்பு விசாவின் செல்லுபடியாகும் சமயத்தில், மகன் அல்லது மகளின் குடியிருப்பு அனுமதி காலமும் அவர்களின் பெற்றோரின் குடியிருப்பு அனுமதி ஒரே கால அளவாக இருக்க வேண்டும், இது இரண்டு அல்லது மூன்று வருடங்களாக இருக்கலாம்.
குடியுரிமை வைத்திருப்பவர்: விசா அனுமதி விண்ணப்பத்துடன், நிர்வாக ஒழுங்குமுறை பட்டியலின் பிரிவு 55 இன் படி, சான்றளிக்கப்பட்ட வாடகை ஒப்பந்தம் மற்றும் சம்பள சான்றிதழுடன் இருக்க வேண்டும். சான்றளிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் போன்ற பெற்றோர்-மகன் உறவை நிரூபிக்கும் ஆவணத்தையும் ஸ்பான்சர் வழங்க வேண்டும்.
வெளிநாட்டினரின் நுழைவு மற்றும் குடியிருப்பு தொடர்பான நிர்வாக விதிமுறைகளின் பட்டியலின்படி, குழந்தை 180 நாட்களுக்கு மேல் அமீரகத்தின் வெளியே இருந்தால், குடியிருப்பு விசா செல்லாவதி ஆகிவிடும். ஸ்பான்சர் செய்யும் பெற்றோரின் விசா ரத்து செய்யப்பட்டால், அது சார்ந்திருப்பவர்களின் விசாவை ரத்தாகி விடும்.
ஒரு புதிய குடியிருப்பு அனுமதியைப் பெற, தங்களுடைய விசா காலாவதியான தேதியிலிருந்தோ அல்லது ரத்துசெய்யப்பட்ட நாளிலிருந்தோ 30 நாள் அவகாசம் வழங்கப்படுகிறது. ஊழியர் தன்னைச் சார்ந்தவர்களின் விசாவை புதுப்பிக்கவோ அல்லது ரத்து செய்யவோ தவறினால், சார்புடையவர்கள் சட்டவிரோத குடியிருப்பாளர்களாகக் கருதப்பட்டு அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
அமீரக குடியேற்றத்தின் அபராத முறையின்படி, சலுகை காலம் முடிந்த பிறகும் தொடர வேண்டிய அபராதம் முதல் நாளுக்கு 125 திர்ஹம்ஸ் மற்றும் அடுத்த ஒவ்வொரு நாளுக்கு 25 திர்ஹமும் ஆகும். மேலும் அவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் தங்கியிருந்தால், அபராதம் ஒரு நாளைக்கு 50 திர்ஹம்ஸ் மற்றும் ஒரு வருடம் அதிகமாகத் தங்கிய பிறகு ஒரு நாளைக்கு 100 திர்ஹம்ஸ் ஆகும்.
விண்ணப்பிப்பது எப்படி
துபாய் இணையதளத்தில் உள்ள குடியிருப்பு விசா மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகத்தில் (GDRFA) அல்லது அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் அத்தாரிட்டி மூலம் தனது குழந்தையின் குடியிருப்பு விசா உரிமையைப் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் அருகிலுள்ள Amer மையம் அல்லது தட்டச்சு மையங்களுக்குச் சென்று தங்கள் குழந்தைகளுக்கான குடியிருப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேவையான ஆவணங்களின் பட்டியல்
- ஸ்பான்சர் எமிரேட்ஸ் ஐடி.
- ஸ்பான்சர் பாஸ்போர்ட் மற்றும் குடியிருப்பு விசா (குறைந்தது 6 மாதங்கள் செல்லுபடியாகும்).
- செல்லுபடியாகும் சம்பள சான்றிதழ்.
- செல்லுபடியாகும் தொழிலாளர் ஒப்பந்தம்.
- பதிவுசெய்யப்பட்ட இஜாரி.
- ஸ்பான்சருக்கு சொந்தமான வீடு அல்லது தங்கிருக்கும் இருப்பிடத்தின் சமீபத்திய மின்சார பில்.
- மகனின் பாஸ்போர்ட் நகல்கள் மற்றும் ஒரு புகைப்படம். பாஸ்போர்ட் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் செல்லுபடியுடன் இருக்க வேண்டும்.
- விசா ஸ்டாம்பிங் அல்லது புதுப்பித்தலின் போது எமிரேட்ஸ் ஐடி விண்ணப்பப் படிவம்.
- 18 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான மருத்துவ பரிசோதனை
- மருத்துவ காப்பீடு.
- ஸ்பான்சர் அக்கவுண்ட் IBAN எண்.
விசாரணைகளுக்கு, அமீரகத்திற்குள் இருந்து 8005 111 என்ற இலவச எண்ணில் Amer மையத்தை அழைக்கவும் அல்லது அமீரகத்திற்கு வெளியில் இருந்து +97143139999 என்ற அண்ணை அழைக்கவும், மேலும் கோரிக்கைகளை amer@gdrfad.gov.ae க்கு மின்னஞ்சல் செய்யலாம். மேலும் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான ஃபெடரல் ஆணையத்தை 600522222 என்ற எண்ணில் அல்லது contactus@icp.gov.ae என்ற மின்னஞ்சல் மூலமாகவும் அணுகலாம்.