கல்பா வாட்டர்ஃபிரண்ட் என்று அழைக்கப்படும் மிகப்பெரிய நீர்முனை சுற்றுலா தலத்தின் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட 100 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக ஷார்ஜா முதலீடு மற்றும் மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. ஷார்ஜா டெவலப்மென்ட் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த சுற்றுலா தளம் இவ்வாண்டு இறுதியில் திறக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் இதில் 119 திர்ஹம்ஸ் மில்லியன் திட்டத்தில் சில முதலீட்டு வாய்ப்புகள் உள்ளன. இந்த வளர்ச்சியானது 183,000 சதுர மீட்டர் பரப்பளவில் விரிவடைந்து, சில்லறை மற்றும் பொழுதுபோக்குத் துறையில் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக ஷார்ஜா டெவலப்மென்ட்டின் செயல் தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் ஒபைத் அல் கசீர், கல்பா நீர்முனை மிகவும் அழகான மற்றும் அமைதியான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இது இயற்கை ஆர்வலர்கள் செல்ல வேண்டிய முக்கிய இடமாகும். இதன் திட்டத்தின் சமகால கட்டிடக்கலை வடிவமைப்பு என ஷாப்பிங் வசதியையும் அளிக்கிறது என்று அல் கசீர் குறிப்பிட்டார்.
மேலும் கூறிய அவர், “இங்கு பல்வேறு உட்புற மற்றும் வெளிப்புற உணவு நிலையங்கள் மற்றும் ஒரு விரிவான நடைபாதை ஆகியவை இடம்பெற உள்ளன, சிறுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் பொழுதுபோக்கிற்காக 1,600 சதுர மீட்டரில் விளையாட்டுப் பகுதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது” என்று ஒபைத் அல் கசீர் கூறினார்.