ADVERTISEMENT

UAE: துபாய் ஓபன் செஸ் தொடரில் வெற்றிபெற்ற தமிழர்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து..!

Published: 6 Sep 2022, 5:08 PM |
Updated: 6 Sep 2022, 5:49 PM |
Posted By: admin

22-வது துபாய் ஓபன் செஸ் போட்டி மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த வருடப் போட்டியில் 171 வீரர்கள் பங்கேற்றனர். இவர்களில் 78 இந்திய வீரர்கள். பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம், அர்ஜுன் எரிகைசி போன்ற பிரபல இந்திய வீரர்கள் இப்போட்டியில் விளையாடினர். பிரக்ஞானந்தாவுடன் அரவிந்த் சிதம்பரம் மோதிய இறுதிப்போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் பிரக்ஞானந்தா இரண்டாவது இடம் பிடித்து, அரவிந்த் சிதம்பரம் வெற்றி பெற்றியாளராக அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், துபாய் ஓபன் செஸ் தொடரை வென்று தனது வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள அரவிந்த் சிதம்பரம் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள். இத்தொடரில், முதல் 10 இடங்களில் இந்திய இளைஞர்கள் எழுவர் இடம்பெற்றுள்ளனர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.