ADVERTISEMENT

சவூதி: சுற்றுலா விசா வைத்திருக்கும் GCC குடியிருப்பாளர்களுக்கு உம்ரா செய்ய அனுமதி..!!

Published: 7 Sep 2022, 5:18 AM |
Updated: 7 Sep 2022, 5:22 AM |
Posted By: admin

சவுதி அரேபியாவிற்குள் நுழைய GCC குடியிருப்பாளர்கள் எளிதில் ஆன்லைனிலேயே சுற்றுலா விசாவை பெற்றுக்கொள்ளலாம் என சவூதி அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து சுற்றுலா விசா வைத்திருக்கும் வளைகுடா (GCC) நாடுகளில் வசித்து வரும் நபர்கள் இப்போது உம்ரா செய்ய அனுமதி பெறலாம் மற்றும் மதீனாவில் உள்ள நபிகள் நாயகத்தின் மசூதியைப் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் GCC குடியிருப்பாளர்கள் ஆன்லைனிலேயே இந்த சுற்றுலா விசாவைப் பெறலாம் என்றும் சவுதி சுற்றுலா அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்தது. இ-விசாவைப் பெற்ற பிறகு, GCC குடியிருப்பாளர்கள் Eatmarna விண்ணப்பத்தின் மூலம் உம்ரா மற்றும் Rawdah Sharif அனுமதிகளை பெற முன்பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் தற்போது இந்த சவுதி சுற்றுலா விசாவை ஆன்லைனில் பெறலாம், GCC நாடுகளில் வசிப்பவர்கள் இது குறித்த மேலும் தகவல்களை https://bit.ly/3wOg5PD என்ற லிங்கில் சென்று காணலாம். அத்துடன் சவூதி அரேபியாவிற்கு வருகை தருபவர்கள் கொரோனாவிற்கான தடுப்பூசி போட்டிருப்பது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT