அமீரக செய்திகள்

அமீரக பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் தெரிந்திருக்க வேண்டிய புதிய பேருந்து விதிமுறைகள்..!

அமீரகத்தில் பொதுப் பள்ளி நிர்வாகங்கள் பள்ளி பேருந்துகளுக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை மாணவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய (2022-2023) கல்வியாண்டில் மாணவர்களின் வீட்டின் முன் பேருந்து ஓட்டுநர் ஒரு நிமிடம் காத்திருக்கும் நிலை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதை ஓட்டுநர் மற்றும் மேற்பார்வையாளருக்குத் தெரிவிக்க பெற்றோர்கள் குழந்தைகளின் பள்ளிப் பைகளை வீட்டின் முன்வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பேருந்து பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விதிகளை மாணவர்கள் பின்பற்றுவதை உறுதி செய்ய, நிர்வாகம் மற்றும் போக்குவரத்து நிறுவனத்துடன் பெற்றோர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நிறுவனங்கள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, குழந்தைகள் எப்போதும் சீட் பெல்ட்களை அணிய வேண்டும், பஸ் இயங்கும்போது நடக்கவோ, இருக்கைகளில் நிற்கவோ கூடாது. மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமருவது அவசியமாகும். மாணவர்கள் கூச்சலிடுவதையும், எரிச்சலூட்டும் சப்தங்களை எழுப்புவதையும் தவிர்க்க வேண்டும், பேருந்து தூய்மையை பராமரிக்க  உள்பட்குதியை சேதப்படுத்தாமல் இருக்க வேண்டும், பேருந்து ஓட்டுநரை மதிக்க வேண்டும்.

மேலும் பேருந்தின் வெளியில் தங்கள் கைகளையோ தலையையோ மாணவர்கள் காட்டக்கூடாது. எந்தவொரு காரணத்திற்காகவும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி பேருந்தில் நுழைய கூடாது, மேலும் ஓட்டுநர் அல்லது மேற்பார்வையாளருக்கு எதிராக புகார் தெரிவிக்க விரும்பினால், அவர்கள் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு பள்ளி பேருந்துகளுக்கான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அமீரக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.

Related Articles

Back to top button
error: Content is protected !!