ADVERTISEMENT

UAE: துபாயில் இரண்டு புதிய பொதுப்பேருந்து வழித்தடங்களை அறிமுகப்படுத்தும் RTA..!

Published: 7 Sep 2022, 3:17 PM |
Updated: 7 Sep 2022, 3:20 PM |
Posted By: admin

துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தனது பொதுப் பேருந்து சேவையில் இரண்டு புதிய வழித்தடங்களைச் சேர்ப்பதாக அறிவித்துள்ளது. இந்த புதிய பாதைகள் துபாய் குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பயணங்களை எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக RTA அதன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது

ADVERTISEMENT
  • F57- ஜெபல் அலி மெட்ரோ நிலையம் மற்றும் புளூ வாட்டர்ஸ் ஐலாண்ட் பகுதிக்கு ஜெபல் அலி மெட்ரோ நிலையத்திலிருந்து பேருந்துகள் வழக்கமாக புறப்படும், பிசியான நேரங்களில் 30 நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்துக்கள் இயக்கப்படும்.
  • 110- அல் சஃபா மெட்ரோ நிலையம் மற்றும் அல் கூஸ் கிரியேட்டிவ் சோன் பகுதிக்கு பிசியான நேரங்களில் 12 நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்துகள் இயக்கப்படும்.