வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி முதல் துபாய் மிர்டிஃப் சிட்டி சென்டரில் காவல்துறையின் மூலோபாய பயிற்சிகள் நடைபெற்றது, இதன் காரணமாக காவலர் பிரிவுகளுக்கு வழிவிடுமாறு வாகன ஓட்டிகளிடம் போலிஸார் கேட்டுக் கொண்டனர். மேலும் அதிகாரிகளின் பயிற்சி தளத்திலிருந்து பொதுமக்கள் விலகி இருக்கவும், பயிற்சிகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்றும் குடியிருப்பாளர்களை காவல்துறை கேட்டுக்கொண்டது.