ADVERTISEMENT

அமீரகத்தில் 3 நிமிடங்களில் வங்கிக் கணக்கு துவங்குவது எப்படி..? விபரம் உள்ளே..!

Published: 9 Sep 2022, 8:14 PM |
Updated: 10 Sep 2022, 10:38 AM |
Posted By: admin

அமீரகத்தில் இனி வங்கிக்கணக்கு துவங்க வேண்டுமானால் வங்கிகளுக்கு அலைய வேண்டியதில்லை. வந்துவிட்டது முழுவதும் டிஜிட்டல் வங்கியான மஷ்ரேக் நியோ (Mashreq NEO). மஷ்ரேக் வங்கியின் துணையில் துவங்கப்பட்டுள்ள இந்தப் புதிய டிஜிட்டல் வங்கியில் கணக்கைத் துவங்குவது மிகவும் எளிதாகும்.

ADVERTISEMENT

முகவெட்டை ஆராய்ந்து உணரும் ஃபேசியல் ரெகக்னிஷன் டெக்னாலஜி facial recognition technology மூலமாக வெறும் 3 நிமிடங்களில் உங்களால் இந்த வங்கியில் கணக்கைத் துவங்க முடியும்.

வங்கிக்கணக்கு துவங்குவது எப்படி?

* Mashreq NEO அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து, அதில் இருக்கும் ஸ்கேனிங் வசதியைப் பயன்படுத்தி உங்களுடைய எமிரேட்ஸ் ஐடியை ஸ்கேன் செய்யவும்.
* உங்களுடைய தகவல்களை பதிவிட்டு சரிபார்த்த பின்னர் உறுதிசெய்யவும்.
* இப்போது செல்ஃபி எடுக்கும்படி அறிவுறுத்தப்படுவீர்கள்.
* அக்கவுண்ட் ரெடி. உங்களுடைய வீடு தேடி டெபிட் கார்டு வந்துசேரும்.

ADVERTISEMENT

அமீரக உள்துறையின் உதவியுடன் மஷ்ரேக் வங்கி இந்த திட்டத்தை முன்னெடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், பயோமெட்ரிக் துறையின் வளர்ச்சி ஆகியவை இத்திட்டத்தை சாத்தியமாக்க உதவுகிறது. மேலும் இது பாதுகாப்பான பணப் பரிவர்த்தனை அனுபவத்தை மக்களுக்கு வழங்குதல், தொழில்நுட்பப் பாதையில் அமீரகத்தை வெற்றிநடை போடச் செய்தல் ஆகியவை இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டதன் முக்கியக் காரணமாகும்.