ADVERTISEMENT

UAE: மஹ்சூஸ் டிராவில் 1 லட்சம் திர்ஹம்ஸ் வென்று அதிர்ஷ்டசாலிகளான இரண்டு இந்தியர்கள்..!

Published: 10 Sep 2022, 8:43 AM |
Updated: 10 Sep 2022, 8:48 AM |
Posted By: admin

சமீபத்தில் நடைபெற்ற மஹ்சூஸ் டிராவில் இரண்டு இந்தியர்கள் உட்பட 40 அதிர்ஷ்டசாலிகள் இரண்டாவது பரிசாக 1 மில்லியன் திர்ஹம்ஸை பகிர்ந்து கொண்டனர். அதில் கேரளாவைச் சேர்ந்த பினு மற்றும் ஜினேஷ் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த முகமது. வாராந்திர ரேஃபிள் டிராவில் தலா 1 லட்சம் திர்ஹம்ஸ் வென்றனர்.

ADVERTISEMENT

துபாயில் ஓட்டுநராக பணிபுரியும் 40 வயதுடைய  ஜினேஷ் 17 வருடங்களாக அமீரகத்தில் வசித்து வருகிறார். அவர் 2020 ஆம் ஆண்டில் இருந்து மஹ்சூஸ் டிராவில் ஆர்வமாக பங்கெடுத்து வருகிறார். இது குறித்து கூறிய அவர் “வெற்றி பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், நான் வெற்றி பெற்றதை எனது நண்பர் தான் என்னிடம் கூறினார். மேலும் எனது ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை இன்னும் இனிமையாக்கிய மஹ்சூஸுக்கு நன்றி கூற விரும்புகிறேன்” என்று ஜினேஷ் கூறினார்.

மற்றோரு வெற்றியாளரான பினு,  கடந்த 14 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் அமீரகத்தில் வசித்து வருகிறார். 41 வயதான இவர் சப்ளை செயின் நிர்வாகியாக பணிபுரிகிறார், இவர் 2021 ஆம் ஆண்டு முதல் மஹ்சூஸ் டிராவில் ஆர்வமாக பங்கெடுத்து வருகிறார்.

ADVERTISEMENT

இது குறித்து கூறிய அவர், “என் அதிர்ஷ்டத்தை என்னால் நம்ப முடியவில்லை. பரிசுத் தொகையை என்ன செய்வது என்பது பற்றி நான் இன்னும் உறுதியான முடிவுகளை எடுக்கவில்லை என்றாலும், எனது குடும்பத்திற்கு நல்ல முதலீடுகளைச் செய்து அவர்களுக்கு வசதியான வாழ்க்கையை வழங்குவேன் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார் பினு.