ADVERTISEMENT

அமீரகத்தில் மூடுபனி: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் தேசிய வானிலை மையம்..!!

Published: 12 Sep 2022, 7:19 AM |
Updated: 12 Sep 2022, 7:21 AM |
Posted By: admin

அமீரகத்தில் கடந்த சில தினங்களாகவே மூடுபனி உருவாகி வரும் நிலையில் இன்றும் மூடுபனி உருவாகும் வாய்ப்பு இருப்பதால் அது தொடர்பான போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளை தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

NCM, இந்த மூடுபனியினால் கிடைமட்டத் தெரிவுநிலை (visibility) மோசமடையும் என எச்சரித்துள்ளது. இது திங்கள்கிழமை காலை 8.30 மணி வரை சில கடலோர மற்றும் உள் பகுதிகளில் குறிப்பாக மேற்கு பகுதிகளில் சில நேரங்களில் இன்னும் குறையக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் வானிலை நிலைமைகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும், மாற்றப்பட்ட வேக வரம்புகளை கவனத்தில் கொள்ளுமாறும் அபுதாபி காவல்துறை வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது. இதன் காரணமாக அபுதாபி – அல் குவைஃபாத் பாதையில் ஷேக் கலீஃபா பின் சயீத் சர்வதேச சாலையில் வேகக் குறைப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT