ADVERTISEMENT

அமீரகத்தில் ஒரு வருடத்திற்கு தேவையான இலவச அன்லிமிடெட் விமான டிக்கெட்டுகளை வென்ற பயணி.. காரணம் என்ன..?

Published: 14 Sep 2022, 7:45 AM |
Updated: 14 Sep 2022, 7:46 AM |
Posted By: admin

அபுதாபியின் குறைந்த கட்டண விமான ஏர் அரேபியா விமானத்தில் பயணம் செய்த ஒருவருக்கு, ஒரு வருடத்திற்கு விருப்பமான இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது, மேலும் அந்த பயணி எந்த இடத்திற்கும் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் அரேபியா விமானத்தில் 25 இடங்களுக்கு 8,000-க்கும் மேற்பட்ட விமான போக்குவரத்தில் 1,000,000 பயணிகள் பயணித்துள்ளனர். அதுபோல அபுதாபி விமான நிலையத்தில் இருந்து ஜியார்ஜியா நாட்டின் திபிலிசிக்கு புறப்படும் 3L714 என்ற விமானத்தில் செக்-இன் செய்து கொண்டிருந்த ஒரு பயணியை விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் வரவேற்றனர்.

அபுதாபி ஏர்போர்ட்ஸ் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜமால் சலிம் அல் தாஹேரி கூறுகையில், “குறுகிய காலத்தில் ஏர் அரேபியா அபுதாபி சிறப்பாக செயல்பட்டு, குறைந்த கட்டண பயணத்திற்கான தேவையை எடுத்துக்காட்டியுள்ளது. அபுதாபி விமான நிலையங்களில், எங்கள் பயணிகளுக்கு மேம்பட்ட இணைப்பு மற்றும் தடையற்ற பயண அனுபவத்தை வழங்க எங்கள் கூட்டாளர் விமான நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். விமானப் போக்குவரத்துத் துறை இப்போது உலகளவில் வலுவான வேகத்தைப் பெற்று வருவதால், ஏர் அரேபியா அபுதாபி தொடர்ந்து மைல்கல் சாதனைகளை எட்டும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

ADVERTISEMENT

ஏர் அரேபியாவின் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதல் அல் அலி கூறுகையில், “கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் விமான சேவையைத் தொடங்கிய இரண்டு ஆண்டுகளுக்குள் இத்தகைய சாதனை செய்தில் விமான நிறுவனம் பெருமிதம் கொள்கிறது.