ADVERTISEMENT

பள்ளிப் பேருந்தில் உயிரிழந்த 4 வயது இந்திய சிறுமி.. பள்ளியை மூட உத்தரவிட்டு கத்தார் அரசு அதிரடி..!!

Published: 15 Sep 2022, 5:04 AM |
Updated: 15 Sep 2022, 7:36 AM |
Posted By: admin

கத்தாரில் படித்து வந்த நான்கு வயது இந்திய மாணவியான மின்சா பள்ளி பேருந்தில் உயிரிழந்ததையடுத்து அந்த சிறுமி படித்து வந்த தனியார் பள்ளியை மூட கத்தார் அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த மின்சா மரியம் எனும் 4 வயதான சிறுமி, தனது பிறந்தநாளான செப்டம்பர் 11 அன்று தனது நர்சரி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது பள்ளி பேருந்திலேயே தூங்கியுள்ளார்.

ADVERTISEMENT

இதனை கவனிக்காத பேருந்து ஓட்டுநரும் மற்றவர்களும் பேருந்தை பூட்டி விட்டு சென்றபடியால் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பள்ளி பேருந்திற்குள் விடப்பட்டதால் மின்சா மயக்கமடைந்திருக்கிறார். நான்கு மணி நேரம் கழித்து பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் திரும்பி வந்தபோது மின்சா மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. இந்த சோக சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து கத்தாரின் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சகம், மேற்கொண்ட விசாரணையில் பள்ளியின் பணியாளர்களிடையே அலட்சியம் இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக அந்த நர்சரி பள்ளியை மூட அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மிகக் கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனையடுத்து மின்சாவின் இறுதிச் சடங்குகள் கேரளாவில் உள்ள அச்சிறுமியின் குடும்பத்தினரின் இல்லத்தில் நடைபெறும் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.