ஐக்கிய அரபு அமீரகத்தில் குலுக்கல் மூலம் மிகப்பெரிய பரிசுத்தொகையை வழங்கி வரும் நிறுவனங்களில் ஒன்றான எமிரேட்ஸ் டிரா தனது முதல் ஆண்டு நிறைவையொட்டி, புதிய டிரா ஒன்றினை தற்பொழுது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய டிராவில் மிக எளிதாக பங்கேற்கலாம் என்றும், இதில் மில்லியன் கணக்கான திர்ஹம்களை வெல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் டிரா புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த டிராவிற்கு EASY6 என பெயரிடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பது ஒரு எளிய, அனைவருக்கும் அணுகக்கூடிய கேம் ஆகும். இதை வெறும் 15 திர்ஹம்ஸில் எமிரேட்ஸ் டிரா இணையதளத்தில் பென்சில் வாங்குவதன் மூலம் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த டிராவில் 10,000,000 திர்ஹம் பரிசு வழங்கப்படும் என உறுதியளித்த நிலையில், தற்பொழுது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த EASY6 டிராக்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அமீரக நேரப்படி இரவு 9 மணிக்கு நடைபெறும் என்றும், முதல் நிகழ்ச்சி செப்டம்பர் 30 அன்று நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் Emirates Draw EASY6 கேம் புதுமையானது என்றும், இது 39 எண்களில் ஆறு எண்களைத் தேர்ந்தெடுத்து வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புகளை வழங்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து எமிரேட்ஸ் டிராவின் சந்தைப்படுத்தல் தலைவரான பால் சேடர் கூறுகையில், “எங்கள் முதல் ஆண்டு நிறைவை நாங்கள் எமிரேட்ஸ் டிரா EASY6 என அழைக்கப்படும் எங்களின் இரண்டாவது கேமை அறிமுகப்படுத்த ஒரு தனித்துவமான தருணமாக பார்த்தோம். இது எங்கள் முதல் கேமை அறிமுகப்படுத்தியதில் இருந்து நாங்கள் அனுபவித்த வெற்றி மற்றும் ஊக்கத்தைப் பாராட்டுவதற்கான ஒரு அடையாளமாக உள்ளது. எங்கள் முதல் கேமை எமிரேட்ஸ் டிரா MEGA7 என்று தற்பொழுது குறிப்பிடுகிறோம். எமிரேட்ஸ் டிரா EASY6, குறைந்த விலையில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகளை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
எப்படி விளையாடுவது?
>> பங்கேற்பாளர்கள் www.emiratesdraw.com இல் சென்று 15 திர்ஹம் மதிப்பிலான பென்சிலை வாங்குவதன் மூலமோ அல்லது ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கும் அப்ளிகேஷன் மூலமாகவோ வாராந்திர வெள்ளிக்கிழமை டிராவில் நுழைவதற்கான வாய்ப்பைப் பெறலாம்.
>> www.emiratesdraw.com அல்லது மொபைல் செயலியில் ஆன்லைனில் பதிவுசெய்த பிறகு, பங்கேற்பாளர்கள் 39 எண்களில் தங்களுக்கு விருப்பமான ஆறு இலக்க எண்களைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது ‘Quick-Pick’ பட்டன் மூலம் கணினியின் மூலம் சீரற்ற முறையில் எண்களைத் தேர்ந்தெடுக்க செய்யலாம்.
> பங்கேற்பாளர்கள் “Multiple Upcoming Draws” என்ற பட்டனை தேர்ந்தெடுப்பதன் மூலம் தொடர்ந்து ஐந்து வாரங்கள் கலந்து கொள்வதற்கான டிக்கெட்டையும் வாங்கிக் கொள்ளலாம்.
ஒவ்வொரு டிக்கெட்டும் பங்கேற்பாளர்களை இரண்டு டிராக்களில் நுழைவதற்கான வாய்ப்பை அளிக்கிறது.
>> அதில் முதலாவது ராஃபிள் டிராவாகும், இதில் ஆறு அதிர்ஷ்டசாலி பங்கேற்பாளர்கள் தலா 15,000 திர்ஹம்கள் வெல்வார்கள் என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
>> இரண்டாவது நான்கு பரிசுப் பிரிவுகளைக் கொண்ட முதன்மை டிராவாகும். இதில் குறைந்தபட்சம் 5 திர்ஹம் முதல் ஆறு எண்களும் பொருந்தினால், 10 மில்லியன் திர்ஹம் பெரும் பரிசு கிடைக்கும் என கூறப்படுகிறது.
எமிரேட்ஸ் டிரா EASY6 எளிமையானது என்பதற்கான காரணங்கள்
இந்த டிராவில் தேர்வு செய்யப்பட்டு வாங்கிய டிக்கெட்டில் பொருந்திய எண்கள் எந்த குறிப்பிட்ட வரிசையிலும் இருக்க வேண்டிய அவசியமில்லை மற்றும் ஸ்டாண்டில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டிய எண்களின் எண்ணிக்கை 39 க்கு மேல் இல்லை. இது உலகளவில் நடத்தப்படும் டிராக்களை ஒப்பிடுகையில் மிகக் குறைவானதாகக் கருதப்படுகிறது.
அதன்படி டிராவில் எடுக்கப்படும் ஆறு எண்களில் மூன்று எண்களைப் பொருத்தும் பங்கேற்பாளர்கள் தலா 5 திர்ஹம்களையும், ஆறு எண்களில் நான்கைப் பொருத்துபவர்கள் 15,000 திர்ஹங்களையும், ஆறு எண்களில் ஐந்தில் பொருந்துபவர்கள் 150,000 திர்ஹங்களையும் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் இறுதியாக, ஆறு எண்களுடன் பொருந்துபவர்கள் 10 மில்லியன் திர்ஹம் கிராண்ட் பரிசைப் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.