ADVERTISEMENT

UAE: ‘Al Ain Zoo’ வை பார்வையிட இன்றும், நாளையும் இலவச அனுமதி.. சவூதியின் தேசிய தினத்தை முன்னிட்டு சிறப்பு சலுகை..!!

Published: 23 Sep 2022, 1:19 PM |
Updated: 23 Sep 2022, 1:20 PM |
Posted By: admin

சவூதி அரேபியாவின் 92 வது தேசிய தினத்தை கொண்டாடும் விதமாக, இன்றும் நாளையும் (செப்டம்பர் 23 மற்றும் செப்டம்பர் 24) அல் அய்ன் மிருகக்காட்சிசாலையை (al ain zoo) பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதியின் தேசிய தினத்தை ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்து கொண்டாடுவதை குறிக்கும் விதமாக இந்த அறிவிப்பை அல் அய்ன் zoo நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் இது தவிர அல் அய்ன் மிருகக்காட்சிசாலைக்கு உள்ளே இயக்கப்படும் சஃபாரி பயணங்களுக்கு அதன் வழக்கமான கட்டணத்திலிருந்து 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படுவதாகவும் அதன் நிர்வாகத்தினர்கள் தெரிவித்துள்ளனர்.

 

ADVERTISEMENT

இதன் மூலம் வனவிலங்குகளுக்கு உணவளிப்பது, அவற்றை மிகவும் நெருக்கமாக காண்பது உட்பட பல்வேறு சுற்றுப்பயணங்கள் மற்றும் அனுபவங்களை பெரும் வாய்ப்பையும் பார்வையாளர்கள் பெற முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அல் அய்னில் உள்ள மிருகக்காட்சிசாலை மற்றும் மீன்வள பொது நிறுவனத்தின் இயக்குனர் ஜெனரல் கானிம் முபாரக் அல் ஹஜெரி இது குறித்து தெரிவிக்கையில், “ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியா இடையேயான வலுவான உறவைக் குறிக்கும் விதமாக, சவூதியின் தேசிய தினத்தில், அல் ஐன் மிருகக்காட்சிசாலை அதன் பார்வையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு நிகழ்வில் நாங்கள் வழங்கும் அனுபவங்களை எங்கள் பார்வையாளர்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்களுடன் சிறந்த நேரத்தை அனுபவிக்க அனைவரையும் அழைக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT