ADVERTISEMENT

மீலாது நபி: வாகனங்களுக்கு இலவச பார்க்கிங்.. டோல் கேட் கட்டணமும் இல்லை.. அறிவிப்பை வெளியிட்ட அபுதாபி…!!

Published: 6 Oct 2022, 2:26 PM |
Updated: 7 Oct 2022, 7:16 AM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமானது (ITC) முகம்மது நபி பிறந்த நாளான மீலாது நபியை முன்னிட்டு வாகனங்களுக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 8, சனிக்கிழமை முதல் அக்டோபர் 10, திங்கட்கிழமை காலை 7.59 வரை பார்க்கிங்  இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், இந்த அதிகாரப்பூர்வ விடுமுறையின் போது முசாஃபா M-18 டிரக் பார்க்கிங் லாட்டில் உள்ள பார்க்கிங் இடங்களும் இலவசமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் அபுதாபி முழுவதும் உள்ள அனைத்து வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களும் மூடப்பட்டிருக்கும் மற்றும் வாடிக்கையாளர்கள் ITC இணையதளத்தில் உள்ள டிஜிட்டல் தளங்கள் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்த விடுமுறை நாட்களில் டார்ப் டோல் கேட் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து டோல்கேட் கட்டணம் வரும் அக்டோபர் 10, 2022 திங்கள் அன்று வழக்கமான பீக் ஹவர்ஸ் என்று சொல்லக்கூடிய போக்குவரத்து அதிகமான நேரங்களில் (காலை 7 மணி முதல் 9 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை) மீண்டும் செயல்பட தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வரும் சனிக்கிழமை, அக்டோபர் 8 என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் அதிகாரப்பூர்வ ஊதிய விடுமுறை அமீரக அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.