துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) துபாய் நகரின் டிராம் தண்டவாளங்களுக்கு அருகில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், துபாய் டிராம் பாதையில் பொறுப்பற்ற முறையில் நுழைந்தால் அல்லது அதன் வழியாக ஓட்டினால் 5,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கும் வீடியோவை ஆணையம் பகிர்ந்துள்ளது.
View this post on Instagram
இது ஆபத்தை ஏற்படுத்தலாம் அல்லது வாகனத்தின் சேவைகளில் செயலிழப்பை ஏற்படுத்தலாம் என RTA எச்சரித்துள்ளது. மேலும் உங்கள் பாதுகாப்பை ஒருபோதும் பணயம் வைக்காதீர்கள் எனவும் வாகன ஓட்டிகளை RTA கேட்டுக்கொண்டுள்ளது.