துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சனிக்கிழமையன்று அல் குத்ரா சாலையில் மேம்பாட்டு பணிகளின் ஒரு பகுதியாக மூன்று வாரங்களுக்கு போக்குவரத்து மாற்றத்தை அறிவித்துள்ளது.
இது குறித்து RTA வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், மூன்று பாதைகளை கொண்ட இந்த சாலையின் இரண்டு திசைகளிலும் உள்ள ரவுண்டானாக்கள் அகற்றப்படும் என்றும் அதேபோன்று அரேபியன் ரேன்செஸ் மற்றும் ஸ்டுடியோ சிட்டியின் என்ட்ரி மற்றும் எக்ஸிட் பகுதியில் உள்ள ரவுண்டானாக்களும் அகற்றப்படும் என்றும் RTA அறிவித்துள்ளது
இதனால் வாகன ஓட்டிகள் முன்கூட்டியே புறப்பட்டு, காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு RTA கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் ஓட்டுநர்கள் தங்கள் இலக்கை அடைய சைன்போர்டுகளை பார்த்து தெரிந்து கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.