ADVERTISEMENT

துபாயில் முதன் முதலாக பறந்த பறக்கும் கார்..!! உலகையே வியக்க வைத்த தருணம்..!!

Published: 12 Oct 2022, 12:09 PM |
Updated: 12 Oct 2022, 12:26 PM |
Posted By: admin

எதிர்காலத்தில் பொது போக்குவரத்து மற்றும் பயணம் எப்படி இருக்கப் போகின்றது என்பதனை துபாய் தற்பொழுது உலகத்திற்கு காட்டியுள்ளது. துபாயில் தற்பொழுது நடைபெற்று வரும் GITEX Global-ன் ஒரு பகுதியாக பறக்கும் கார் ஒன்று காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சீன தொழில்நுட்பம் மற்றும் மின்சார வாகன உற்பத்தியாளரான Xpeng நிறுவனம், தனது X2 பறக்கும் காரின் முதல் வெற்றிகரமான சோதனைப் பயணத்தை கடந்த திங்கள்கிழமை துபாயில் நிறைவுசெய்துள்ளது.

ADVERTISEMENT

இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த பறக்கும் கார் அதிகபட்சமாக 760 கிலோ டேக்-ஆஃப் எடையும், 560 கிலோ வெற்று எடையும் கொண்டது. மேலும் இது அதிகபட்சமாக மணிக்கு 130 கிமீ வேகத்தில் பறக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலையில் இரு இறக்கைகள் என நான்கு புறமும் மொத்தம் 8 இறக்கைகளை கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த கார் பிரீமியம் கார்பன் ஃபைபர் பொருட்களால் ஆனது மற்றும் ஏர்ஃப்ரேம் பாராசூட் இதில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செங்குத்தாக புறப்படும் மற்றும் தரையிறங்கும் வாகனமான (eVTOL) இந்த பறக்கும் கார் ஒரு அறிவார்ந்த விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு (intelligent flight control system) மற்றும் தன்னாட்சி விமானத் திறன்களைக் (autonomous flight capabilities) கொண்டுள்ளது மற்றும் இது பறக்கும் காரின் சமீபத்திய தலைமுறையாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இது பூஜ்ஜிய கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பறக்கும் காரின் சோதனை ஓட்ட நிகழ்ச்சியில் அமீரகத்தில் உள்ள சீன தூதரக அதிகாரிகள் மற்றும் அமீரக அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த பறக்கும் கார் வணிக பயன்பாட்டுக்கு வருவது குறித்து விளக்குகையில் ஒரு அதிகாரி, “வணிக பயன்பாட்டுக்கு வருவது எதிர்கால கட்டமைப்பை நாம் எவ்வளவு விரைவாக ஏற்றுக்கொள்ள முடியும் என்பதைப் பொறுத்தது. இது பயன்பாட்டுக்கு வருவதற்கு முன் பல்வேறு கட்ட சோதனைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.