ADVERTISEMENT

வீடியோ: UAE ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்ட ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா..!!

Published: 13 Oct 2022, 7:15 AM |
Updated: 13 Oct 2022, 8:17 AM |
Posted By: admin

மலைகள் வழியாக ஒரு அழகிய பாதையில் பயணிகளை அழைத்துச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய ரயில் நெட்வொர்க்கின் பிரதான பாதையானது அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவின் எல்லையில் உள்ள Ghuweifat இல் தொடங்குகிறது. அங்கு தொடங்கி அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய எமிரேட்ஸ் வழியாக இந்த ரயில் பாதை செல்கிறது.

ADVERTISEMENT

இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு எமிரேட்டுகளான ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாவை நாட்டின் ரயில் நெட்வொர்க்குடன் இணைக்கும் பாதைகள் நிறைவடைந்துள்ளதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய இரயில் நெட்வொர்க்கின் டெவலப்பர் மற்றும் ஆபரேட்டரான Etihad Rail, ஃபுஜைராவில் வரும் வாரங்களுக்குள் இந்த தண்டவாளப் பணிகளை முடிக்க முயற்சிப்பதாக தெரிவித்துள்ளது. இது பற்றி தெரிவிக்கையில், “இது லாஜிஸ்டிக்ஸ் மற்றும் போக்குவரத்து துறையில் புதிய வாய்ப்புகளைத் திறப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். சமூக மேம்பாட்டிற்கு உந்துதல் மற்றும் பல துறைகளில் அமீரகம் மற்றும் பிராந்தியத்தில் நம்பிக்கைக்குரிய பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதில் இது முக்கிய பங்கு வகிக்கும்” என்று ரயில்வே திட்டத்தின் துணை திட்ட மேலாளர் பொறியாளர் Khuloud Al Mazrouei கூறியுள்ளார்.

ADVERTISEMENT

சுமார் 3,250 தொழிலாளர்கள் 25 மாதங்களுக்குள் 13 மில்லியன் மணிநேரம் செலவழித்து இரண்டு எமிரேட்களிலும் இந்த வேலையை முடித்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இதில் ஷார்ஜாவில் உள்ள பாதை 45 கிமீக்கு மேல் நீண்டுள்ளது என்றும் 145 கிமீ நீளம் கொண்ட இந்த திட்டத்தின் கடைசி தொகுப்பின் ஒரு பகுதியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பாதையின் இந்தப் பகுதி மட்டும் 11.7 மில்லியன் வேலை நேரத்தை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராஸ் அல் கைமாவில், இந்த பாதை 5.7 கிமீ வரை நீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து மஸ்ரூயி தெரிவிக்கையில், “இந்த திட்டத்தை உண்மையாக்குவதில் முக்கிய ஆதரவை வழங்கிய ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமாவின் எமிரேட்ஸில் உள்ள உள்ளூர் அரசாங்க நிறுவனங்களுக்கு எங்கள் நேர்மையான பாராட்டுக்களை தெரிவிக்க விரும்புகிறோம்” என்று கூறியுள்ளார்.

அத்துடன் “எத்திஹாட் ரயிலின் மூலோபாய தேசிய திட்டத்தை அபிவிருத்தி செய்யும் இந்த நடவடிக்கைக்கு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்,

ஷார்ஜாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரையிலான பாதையில் 54 பாலங்கள் மற்றும் 20 விலங்குகள் கடக்கும் இடங்கள் உள்ளன. மேலும் இது ஒன்பது சுரங்கப்பாதைகளையும் கொண்டுள்ளது, இது ஹஜர் மலைகள் வழியாக 6.9 கிமீ வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 1.8 கிமீ தூரம் செல்லும் மிகப்பெரிய கனரக சரக்கு ரயில் சுரங்கப்பாதையும் இந்த வழிதடத்தில் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.