ADVERTISEMENT

UAE: இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு 2.5 மில்லியனுக்கும் அதிகமான உணவுகளை விநியோகித்த ‘1 பில்லியன் மீல்ஸ்’ திட்டம்..!!

Published: 17 Oct 2022, 4:24 PM |
Updated: 17 Oct 2022, 4:27 PM |
Posted By: admin

பிராந்தியத்திலேயே மிகப்பெரிய அளவில் அமீரகத்தில் துவங்கப்பட்ட 1 பில்லியன் மீல்ஸ் திட்டமானது மைல்கல்லை எட்டியுள்ளது. உலகின் நான்கு கண்டங்களில் உள்ள 50 நாடுகளில் இருக்கும் பின்தங்கிய மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் துவங்கப்பட்ட 1 பில்லியன் மீல்ஸ் முயற்சியானது ஏழு ஆசிய நாடுகளில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான உணவுகளை விநியோகித்துள்ளதாக தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த 1 பில்லியன் மீல்ஸ் முயற்சியானது, இந்தியா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியாவில் உள்ள பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள ஆதரவற்ற மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உணவு ஆதரவை வழங்கியது என கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தனிநபர்கள் மற்றும் குடும்பங்கள் பல வாரங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவைத் தயாரிக்க உதவும் பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகள் சுமார் 75,000 பயனாளிகளுக்கு நேரடியாக விநியோகிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் குளோபல் இனிஷியேட்டிவ் (MBRGI) நிறுவனமானது முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மனிதாபிமான மற்றும் தொண்டு நிறுவனத்துடன் (MBRCH) இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

ADVERTISEMENT

இதன்கீழ் இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் சுமார் 1,537,500 உணவுகள் விநியோகிக்கப்பட்டன என்றும் மேலும் 800,000 உணவுகள் நான்கு நாடுகளில் சமமாக விநியோகிக்கப்பட்டன என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி மீதமுள்ள நான்கு நாடுகளுக்கும் 200,000 உணவுகள் வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. கூடுதலாக, பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியாவில் உள்ள வேறு சில இடங்களுக்கும் தலா 100,000 உணவுகள் விநியோகிக்கப்பட்டன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலாசார மற்றும் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் ஆலோசகரும், MBRCH இன் துணைத் தலைவருமான இப்ராஹிம் புமெல்ஹா, “உலகெங்கிலும் உள்ள பின்தங்கிய மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்களைச் சென்றடைவதற்கான 1 பில்லியன் மீல்ஸ் திட்டம், மக்கள் மற்றும் அவர்களின் சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த MBRCH இன் நோக்கத்தை பிரதிபலிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீ்ரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் தொலைநோக்குப் பார்வையுடன், தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இந்த திட்டம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

MBRGI இன் இயக்குனர் சாரா அல் நுவைமி கூறுகையில் “இந்த 1 பில்லியன் மீல்ஸ் முன்முயற்சியானது, ஆசியாவின் பல நாடுகளில் உள்ள ஏழைகளின் பெரும் பகுதிகளை அடைந்துள்ளது. இது நேரடி உணவு உதவி மற்றும் ஊட்டச்சத்து பாதிக்கப்பட்ட  சமூகங்களுக்கு ஒரு பாதுகாப்பை வழங்குகிறது” என தெரிவித்துள்ளார்.

மேலும் “புவியியல், இனங்கள் அல்லது மதங்கள் என எவ்வித பாகுபாடு இல்லாமல் உதவி வழங்குவதற்கான MBRGI இன் நோக்கத்திற்கு ஏற்ப, உலகெங்கிலும் உள்ள நான்கு கண்டங்களில் உள்ள 50 நாடுகளில் மில்லியன் கணக்கானவர்களுக்கு உதவி வழங்குவதற்காக 1 பில்லியன் மீல்ஸ் முன்முயற்சியானது தனது உணவு விநியோக நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அல் நுவைமி எடுத்துரைத்துள்ளார். இது ஐக்கிய அரபு அமீரக சமூகத்தில் வேரூன்றியிருக்கும் கொடுப்பது, தாராள மனப்பான்மை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் பிரதிபலிப்பாகும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.