ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று நிலவும் மூடுபனி..!! மஞ்சள், சிவப்பு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..!!

Published: 18 Oct 2022, 7:27 AM |
Updated: 18 Oct 2022, 7:31 AM |
Posted By: admin

அமீரகத்தில் இன்றைய நாள் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இன்று காலை 9 மணி வரை சில கடலோர மற்றும் உள் பகுதிகளில் சில சமயங்களில் கிடைமட்ட தெரிவுநிலை (visibility) குறைந்து மூடுபனி உருவாகும் வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. 

ADVERTISEMENT

இதன் காரணமாக அமீரகத்தின் சில பகுதிகளில் மஞ்சள் எச்சரிகையும் சில இடங்களில் சிவப்பு எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் வெப்பநிலை அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அதன்படி அபுதாபியில் அதகபட்சமாக 38ºC ஆகவும், துபாயில் அதிகபட்சமாக 37ºC ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

மேலும் அபுதாபி மற்றும் துபாயில் ஈரப்பதம் அளவு 25 முதல் 90 சதவீதம் வரை இருக்கும் மற்றும் லேசானது முதல் மிதமான காற்று வீசும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.