ADVERTISEMENT

துபாயில் நடைபெற இருக்கும் இசைஞானியின் ’இசை ராஜாங்கம்’.. எப்பனு தெரியுமா..??

Published: 24 Oct 2022, 5:08 PM |
Updated: 24 Oct 2022, 5:21 PM |
Posted By: admin

தமிழகத்தின் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான இசைஞானி இளையராஜா ஐக்கிய அரபு அமீரகத்தில் இசைக்கச்சேரியை நடத்தவுள்ளார். ‘Black Sheep’ உடன் இணைந்து இளையராஜா நடத்தவுள்ள ‘இசை ராஜாங்கம், இளையராஜா லைவ் இன் கச்சேரி (Isai rajangam, ilaiyaraja live in concert)’ என்ற இசைக்கச்சேரியானது துபாயில் நவம்பர் மாதத்தில் நடத்தப்படவுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் பிரபல பின்னணி பாடகர்களான மனோ, ஸ்வேதா மோகன், கார்த்திக், SPB சரண், விபாவரி ஆப்தே ஜோஷி, ப்ரியா ஹிமேஷ் மற்றும் அனிதா கார்த்திகேயன் போன்றோர் கலந்து கொள்ளவுள்ளனர்.  இவர்களுடன் 65 இசைக்கலைஞர்கள் சேர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளில் மக்களின் மனம் கவர்ந்த பாடல்கள் நிகழ்ச்சியில் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

இவர் இதற்கு முன் கடந்த மார்ச் மாதத்தில் எக்ஸ்போ துபாயில் இசை கச்சேரியை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பின் நடத்தப்படவுள்ள இந்த இசைக்கச்சேரி வரும் நவம்பர் 25 ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் (Coco Cola Arena) இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்றும் கச்சேரிக்கான டிக்கெட்டுகள் Book My Show-ல் நவம்பர் 6 வரை தள்ளுபடியுடன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, www.coca-cola-arena.com என்ற இணையதளத்தை அணுகலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.