அபுதாபியில் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வரும் பிக் டிக்கெட் ராஃபிள் டிராவில் வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிகள் 10 மில்லியன் 20 மில்லியன் திர்ஹம்ஸ் என மாபெரும் பரிசுத்தொகையை பெற்று வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அதில் முதன்முறையாக இதுவரை இல்லாதளவில் 30 மில்லியன் திர்ஹம்ஸ் என்ற பிரம்மாண்ட பரிசை வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலி நபருக்கு வழங்கப்படவிருப்பதாக அபுதாபி பிக் டிக்கெட் குழு அறிவித்துள்ளது.
அத்துடன் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் நடத்தப்படும் இந்த டிராவில் பங்கேற்பவர்களில், இரண்டாவது பரிசாக 1 மில்லியன் திர்ஹம்ஸ் வெல்லலாம் என்றும் இதனை தவிர்த்து, மேலும் பல அற்புதமான பணப் பரிசுகளும் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாமல் சமீப காலமாக நடைபெற்று வரும் வாராந்திர மின்னணு ரேஃபிள் டிராவும் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளதோடு அதில் வெற்றி பெறும் நபர்களுக்கும் 1 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிக் டிக்கெட்டினை வாங்க விருப்பமுள்ளவர்கள் www.bigticket.ae என்ற இணையதளம் மூலமோ அல்லது அபுதாபி அல்லது அல் அய்ன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பிக் டிக்கெட் கவுண்டர்களிலோ சென்று வாங்கிக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
வாராந்திர குலுக்கல்களுக்கான தேதிகள்:
>> நவம்பர் 1-9 தேதிகளில் டிக்கெட் வாங்கும் நபர்களுக்கான மின்னணு டிரா நடத்தப்படும் தேதி நவம்பர் 10
>> நவம்பர் 10-16 தேதிகளில் டிக்கெட் வாங்கும் நபர்களுக்கான மின்னணு டிரா நடத்தப்படும் தேதி நவம்பர் 17
>> நவம்பர் 17-23 தேதிகளில் டிக்கெட் வாங்கும் நபர்களுக்கான மின்னணு டிரா நடத்தப்படும் தேதி நவம்பர் 24
>> நவம்பர் 24-30 தேதிகளில் டிக்கெட் வாங்கும் நபர்களுக்கான மின்னணு டிரா நடத்தப்படும் தேதி டிசம்பர் 1
கூடுதலாக வார டிராவில் வெற்றி பெற்றவர்களுக்கு மாத டிராவில் வெற்றி பெறும் மற்றொரு வாய்ப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.