ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து மசூதிகளிலும் வரும் நவம்பர் 11, வெள்ளிக்கிழமை அன்று மழைக்காக வேண்டி சிறப்பு தொழுகை நடைபெறும் என்று அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
“சலாத் அல் இஸ்திஸ்கா” என்று அழைக்கப்படும் இந்த சிறப்பு தொழுகையானது, நாட்டில் மழை பெய்வது தாமதமானால் பின்பற்றப்படுகிறது.
அமீரக ஜனாதிபதி அறிவித்துள்ள இந்த சிறப்பு தொழுகையானது வரும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு 10 நிமிடங்களுக்கு முன் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.