ADVERTISEMENT

அரசு அதிகாரிகளை கடுமையாக தாக்கிய வெளிநாட்டவர்கள்..!! உடனடியாக நாடு கடத்த உத்தரவிட்ட குவைத்..!!

Published: 8 Nov 2022, 8:46 PM |
Updated: 8 Nov 2022, 8:50 PM |
Posted By: admin

குவைத்தில் வர்த்தக அமைச்சக ஆய்வாளர்களைத் தாக்கியதற்காக பத்து வெளிநாட்டவர்கள் குவைத்தில் இருந்து நாடு கடத்தப்படுவார்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ADVERTISEMENT

குவைத்தில் இருக்கும் ஃபர்வானியா கவர்னரேட்டின் தஜீஜ் சுற்றுப்புறத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ஆய்வு பிரச்சாரத்தின் போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வுப் பிரச்சாரத்தின் போது ஒரு அதிகாரி ஒரு எகிப்திய வெளிநாட்டவரிடம் கடையில் இருக்கும் போது புகைபிடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும், ​​​​அதற்கு அவர் ஆத்திரமடைந்து இன்ஸ்பெக்டரை துஷ்பிரயோகம் செய்து தாக்கத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாமல் அப்போது தன்னுடன் சேர்ந்த 9 பேரை அழைத்து அதிகாரிகளை தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட எகிப்தியர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அப்போது இன்ஸ்பெக்டர்கள் மருத்துவ அறிக்கையை வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதன்பின் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தல் மையத்திற்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஆய்வாளர்களின் பணிக்கு இடையூறு விளைவித்தல், உள்ளூர் சட்டங்களை மீறுதல், அரசு ஊழியர்களை தாக்குதல் மற்றும் அலட்சியம் காட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT