ADVERTISEMENT

FIFA 2022: அர்ஜென்டினாவை வீழ்த்திய சவூதி அரேபியா.. நாடு முழுவதும் நாளை பொது விடுமுறை.. சவூதி அரசு அதிரடி அறிவிப்பு..!!

Published: 22 Nov 2022, 8:08 PM |
Updated: 22 Nov 2022, 8:10 PM |
Posted By: admin

கத்தாரில் நடைபெற்று வரும் உலக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியின் இன்றைய ஆட்டத்தில் விளையாடிய சவூதி அரேபியா அணி வெற்றி பெற்றதையடுத்து, நாளை சவூதி அரேபியா முழுவதும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உலக கோப்பை கால்பந்தாட்ட அணிகளின் குரூப் C -ல் இருக்கும் சவூதி அரேபியாவிற்கும், பலமுறை கோப்பையை வென்ற அணியும், இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் அரஜென்டினாவிற்கும் இடையே இன்று கத்தாரின் லுசைல் ஸ்டேடியத்தில் போட்டி நடைபெற்றது. ஆரம்பம் முதலே விருவிருப்பாக இரு அணிகளும் விளையாடி வந்த நிலையில், 2 கோல்களை அடித்திருந்த சவூதி அரேபியா ஆட்டத்தின் இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ADVERTISEMENT


சவூதி அரேபியாவின் இந்த வரலாற்று வெற்றியை தொடர்ந்து
நாளை, நவம்பர் 23 ம் தேதி சவூதி அரேபியாவில் பொது விடுமுறை விடப்படுவதாக இன்று செவ்வாய்க்கிழமை சவூதி அரசு அறிவித்துள்ளது.

இந்த பொது விடுமுறையானது, அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும், நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT