ADVERTISEMENT

அமீரக தேசிய தின கொண்டாட்டம்: மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வெளியிட்ட அமைச்சகம்..!!

Published: 25 Nov 2022, 5:34 PM |
Updated: 25 Nov 2022, 5:45 PM |
Posted By: admin

அமீரகத்தில் வரவிருக்கும் தேசிய தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய தினம் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்படவுள்ள நிலையில் உள்துறை அமைச்சகம் பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பின்பற்ற வேண்டிய பல விதிமுறைகளை அறிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதை காவல்துறை மேற்பார்வையிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமைச்சகமானது தேசிய தின கொண்டாட்டங்களுக்கான 10 விதிகளை பட்டியலிட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை போக்குவரத்து ஒழுங்கு மற்றும் வாகன விதிமுறைகள் தொடர்பானவையாகும்.

விதிமுறைகள்

>> தேசிய தின கொண்டாட்டங்களின் போது அணிவகுப்புகள் மற்றும் கூட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன

ADVERTISEMENT

>> தேசிய தினத்தை கொண்டாடுபவர்கள் போக்குவரத்து விதிகள் மற்றும் காவல்துறையினரின் அறிவுறுத்தல்களை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

>> வாகன ஓட்டிகள், பயணிகள் அல்லது பாதசாரிகள் என அனைவரும் ஸ்ப்ரே தெளிப்பதைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

>> வாகனத்தின் முன் அல்லது பின்னால் இருக்கும் நம்பர் பிளேட் தெரியும்படி இருக்க வேண்டும் மற்றும் வாகனத்தின் நிறத்தை மாற்றக்கூடாது. மேலும் ‘Blackout’ அல்லது ‘windshield tinting’ அனுமதிக்கப்படாது.

>> வாகனத்தில் ஏதேனும் சொற்றொடர்களை எழுதுவது அல்லது பொருத்தமற்ற ஸ்டிக்கர்களை ஒட்டுவது தடைசெய்யப்பட்டுள்ளது.

>> வாகனங்களில் பயணிக்க அங்கீகரிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது மற்றும் எந்த பயணியும் ஜன்னல்களை விட்டு வெளியே வரக்கூடாது மற்றும் வாகனத்தின் சன்ரூஃப்பை எப்போதும் திறக்கக்கூடாது.

>> வாகனங்களில் இரைச்சலை ஏற்படுத்தும் சாதனங்களை இணைக்கவோ அல்லது என்ஜின் கட்டமைப்பில் மாற்றம் செய்யவோ கூடாது.

>> வாகன ஓட்டிகள் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கவோ அல்லது மற்றவர்களின் பாதைகளை தடுக்கவோ அனுமதிக்கப்படுவதில்லை.

>> உள் மற்றும் வெளிப்புற சாலைகளில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படாது.

>> வாகனத்தின் பக்கவாட்டு ஜன்னல்கள் மற்றும் முன் மற்றும் பின்புற கண்ணாடிகளை ஸ்டிக்கர்களால் மூடுவது அல்லது முன்புறம் சன்ஷேட் வைப்பது சட்டவிரோதமானது.