அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு டிசம்பர் 1, வியாழன் முதல் டிசம்பர் 3, 2022 சனிக்கிழமை வரை என மூன்று நாட்கள் வாகன ஓட்டிகளுக்கு இலவச பார்க்கிங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பார்க்கிங் இலவசம் என்பதால் வாகன ஓட்டிகள் நான்கு நாட்கள் இலவச பார்க்கிங்கைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அபுதாபியில் உள்ள நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) தெரிவிக்கையில் தேசிய தின விடுமுறை நாட்களான புதன்கிழமை, டிசம்பர் 1, வியாழன் தொடங்கி டிசம்பர் 5 திங்கள் காலை 7.59 வரை பார்க்கிங் இடங்கள் மற்றும் டார்ப் டோல் கேட் கட்டணம் வசூலிக்கப்படாது என தெரிவித்துள்ளது.
மேலும் மவாக்கிஃப் விதிமுறைகளை கடைபிடிக்குமாறும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் தங்கள் வாகனங்களை நிறுத்தவோ அல்லது போக்குவரத்தை தடுக்கவோ கூடாது என ITC பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது. மேலும் அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரை ரெசிடென்ஷியல் பார்க்கிங் எனும் குடியிருப்போர் நிறுத்தம் தொடர்பான மவாக்கிஃப் விதிமுறைகளை கடைபிடிக்குமாறும் வாகன ஓட்டிகளுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான அனைத்து சேவைகளையும் ITC இன் இணையதளமான www.itc.gov.ae என்ற வலைதளத்தலோ customer.care@itc.gov.ae என்ற ஈமெயில் மூலமோ அல்லது Darb Smart phone அப்ளிகேஷன் மூலமோ கோரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி மையங்களை 80088888 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.