ADVERTISEMENT

UAE: தேசிய தினத்தை முன்னிட்டு பார்வையாளர்களுக்கு இலவச நுழைவு..!! ஷார்ஜா அருங்காட்சியக ஆணையம் அறிவிப்பு..!!

Published: 1 Dec 2022, 8:45 PM |
Updated: 1 Dec 2022, 8:47 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் 51 வது தேசிய தினத்தை கொண்டாடும் வகையில் டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் ஷார்ஜா அருங்காட்சியக ஆணையம் (SMA) அதன் அருங்காட்சியகங்களுக்கு பார்வையாளர்களுக்கான இலவச நுழைவை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கூடுதலாக, SMA அனைத்து வயதினரையும் சேர்ந்த பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் கல்வி தொடர்பான செயல்டுபாகளை வழங்கும் என தெரிவித்துள்ளது. அரபு மற்றும் ஆங்கில மொழிகளில் வழங்கப்படும் நிகழ்வுகளைக் குறிக்கும் நடவடிக்கைகள் டிசம்பர் 2 ஆம் தேதி ஷார்ஜா கோட்டை (அல் ஹிஸ்ன்), ஷார்ஜா கடல்சார் அருங்காட்சியகம் (Sharjah Maritime Museum) மற்றும் ஹிஸ்ன் கோர் ஃபக்கான் (Hisn Khor Fakkan) ஆகிய இடங்களில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேடிக்கை நிறைந்த இந்த செயல்பாடுகளில் பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் போட்டிகள், நாட்டுப்புற நிகழ்ச்சிகள் மற்றும் அணிவகுப்பு ஆகியவை அடங்கும் எனவும் டிசம்பர் 2 ஆம் தேதி, ஷார்ஜா கடல்சார் அருங்காட்சியகத்தில் நிகழ்வுகள் மதியம் 2:30 மணிக்கு அணிவகுப்புடன்  தொடங்கும் என்றும், அதைத் தொடர்ந்து 4:30 முதல் 10:00 மணி வரை பல நடவடிக்கைகள், இதில் வொர்க்‌ஷாப், எமிராட்டி பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் டிரம் பேண்ட் நிகழ்ச்சிகள் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், ஹிஸ்ன் கோர் ஃபக்கனில் மாலை 4:30 முதல் இரவு 9:00 வரையிலும், ஷார்ஜா கோட்டையில் (அல் ஹிஸ்ன்) மாலை 4:30 முதல் இரவு 8:00 வரையிலும் நடக்கும் நிகழ்வுகள் பார்வையாளர்களுக்கு பல்வேறு பொழுதுபோக்கு செயல்பாடுகளை வழங்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.