ADVERTISEMENT

UAE: பிக் டிக்கெட் டிராவில் 30 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகையை வென்று கோடீஸ்வரர் ஆன இந்தியர்..!!

Published: 4 Dec 2022, 8:18 AM |
Updated: 4 Dec 2022, 8:23 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற பிக் டிக்கெட்டின் ரேஃபிள் டிரா சீரிஸ் 246 இல் ஷார்ஜாவைச் சேர்ந்த இந்தியர் 30 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

ADVERTISEMENT

வெற்றி பெற்று கோடீஸ்வரராகி உள்ள காதர் ஹுசைன் என்பவர் கடந்த நவம்பர் 6 ஆம் தேதி தனக்கு வெற்றியைப் பெற்று தந்த 206975 என்ற எண் கொண்ட டிக்கெட்டை வாங்கியதாக தெரிவித்துள்ளார். அவர் இரண்டு டிக்கெட்டுகளை வாங்கினால் ஒன்று இலவசம் என்றதன்படி 3 டிக்கெட்டுகளை வாங்கியதாகவும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு இதுவரை 100க்கும் மேற்பட்ட ரொக்கப் பரிசுகளை பிக் டிக்கெட் வழங்கியுள்ளது. அதே போல் இந்த மாதத்தில் டிக்கெட் வாங்கும் நபர்களுக்கான டிராவானது அடுத்த மாதம் 3 ம் தேதி நடைபெறும். அதில் வெற்றி பெறும் முதல் அதிர்ஷ்டசாலி நபருக்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய ஜாக்பாட்டான 35 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்த டிக்கெட்டினை வாங்க விரும்பும் நபர்கள் www.bigticket.ae என்ற வலைதளத்திலோ அல்லது அபுதாபி மற்றும் அல் அய்ன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பிக் டிக்கெட் கவுண்டர்களிலோ டிக்கெட்டினை வாங்கிக் கொள்ளலாம்.