ADVERTISEMENT

குவைத்: இஞ்சினீயர்களுக்கு இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு..!!

Published: 10 Dec 2022, 9:26 PM |
Updated: 11 Dec 2022, 12:35 PM |
Posted By: admin

வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் இருக்கும் இந்திய தூதரகமானது குவைத்தில் உள்ள இஞ்சினீயர்களுக்கான புதிய பதிவு முறையை தொடங்கியுள்ளது. இதற்கு முன் இந்த பதிவு முறையானது கடந்த செப்டம்பர் மாதம் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்திய தூதரகத்தால் நடத்தப்படும் இந்த பதிவு முறையானது ஏற்கெனவே குவைத்தில் இருக்கும் இந்திய பொறியாளர்களின் தரவுகளை புதுப்பித்து முக்கிய குறிப்புகளுக்காக பயன்படுத்தப்படுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

குவைத்தில் உள்ள பொறியாளர்கள் https://forms.gle/vFJaUcjjwftrqCYE6  என்ற லிங்கில் சென்று அதில் தங்களது விபரங்களை இட்டு பதிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கு முன்னர் பதிவு செய்த பொறியாளர்களும் தற்பொழுது இந்த தளத்தில் பதிவு செய்யுமாறு தூதரம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் இந்த தளத்தில் பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள் டிசம்பர் 22 என தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT