ADVERTISEMENT

சுற்றுலாவாசிகளுக்கான உலகின் மிக சிறந்த நகரங்களில் துபாய் இரண்டாம் இடம்..!!

Published: 16 Dec 2022, 1:42 PM |
Updated: 16 Dec 2022, 1:50 PM |
Posted By: admin

உலகெங்கிலும் உள்ள சுற்றுலாவாசிகளுக்கு மிகவும் பிடித்த நகரங்களில் ஒன்றாக இருப்பது துபாய். ஆண்டுதோறும் இலட்சக்கணக்கில் மக்கள் துபாய்க்கு சுற்றுலா வருகின்றனர். அத்துடன் உலகளவில் மக்களுக்கு பிடித்த சுற்றுலா இடத்தில் துபாய் முதன்மையான இடத்தில் இருப்பதாக பல ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

அதைப் போலவே யூரோமானிட்டர் இன்டர்நேஷனல் (Euromonitor International) என்ற நிறுவனத்தின் 2022 ம் ஆண்டிற்கான சிறந்த 100 நகரங்களின் அட்டவணை படி, உலகளவில் சுற்றுலாவிற்கான மிகவும் கவர்ச்சிகரமான நகரங்களில் துபாய் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொருளாதார மற்றும் வணிக செயல்திறன், சுற்றுலா செயல்திறன், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுற்றுலா கொள்கை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு, மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

“சுற்றுலா செயல்திறன், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் துபாய் மிகச் சிறப்பாக செயல்பட்டது மற்றும் சுற்றுலாக் கொள்கை மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு நல்ல நிலையை துபாய் கொண்டுள்ளது. எனவே, எங்கள் குறியீட்டில் துபாய் நகரம் மிகவும் உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது” என்று இந்த நிறுவனத்தின் மூத்த திட்ட மேலாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸ் பிடித்துள்ளதாகவும் மேலும், முதல் 10 இடங்களிங் ஆம்ஸ்டர்டாம், மாட்ரிட், ரோம், லண்டன், முனிச், பெர்லின், பார்சிலோனா மற்றும் நியூயார்க் ஆகிய நகரங்கள் பிடித்துள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

2021-22ல், கொரோனாவிற்கான பயணக் கட்டுப்பாடுகள் எளிதாக்கப்பட்டதன் காரணமாக, துபாய் எமிரேட்டில் பயணம் மற்றும் சுற்றுலாத் துறைகள் மிகவும் வலுவாக மீண்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சமீபத்திய உலக சுற்றுலா மற்றும் சுற்றுலா கவுன்சில் ஆய்வின்படி, 2022 ஆம் ஆண்டில் உலகின் அனைத்து நகரங்களை ஒப்பிடுகையில் துபாயானது அதிக சுற்றுலா செலவுகளை பதிவு செய்துள்ளதாகவும், இது $29.4 பில்லியன் (Dh108 பில்லியன்) ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் OAG (Official Airline Guide) ஆல் வெளியிடப்பட்ட மற்றொரு சுவாரசியமான தரவின் படி, இந்த ஆண்டு முதல் 10 பிஸியான விமானப் பயண வழித்தடங்களில் முதல் ஐந்து இடங்களில் துபாய் இடம்பிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவில், Euromonitor இன் படி, துபாய் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த நகர்மாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.