ADVERTISEMENT

FIFA 2022: அர்ஜென்டினா-பிரான்ஸ் இறுதிப்போட்டியை இலவசமாக ஒளிபரப்பும் BeIN SPORTS.. லிங்க் உள்ளே..!!

Published: 18 Dec 2022, 4:32 PM |
Updated: 18 Dec 2022, 4:41 PM |
Posted By: admin

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தாரில் கடந்த சில வாரங்களாக கோலாகலமாக நடந்து வந்த பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. உலகிலுள்ள மொத்தம் 32 நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் கோப்பையை வெல்வதற்கான இறுதி போட்டி இன்று கத்தாரிலுள்ள அல் லுஸைல் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியை இலவசமாக ஒளிபரப்பப் போவதாக BeIN SPORTS நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து BeIN SPORTS நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு ட்வீட்டில், அதன் இலவச சேனல் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் கால்பந்து ரசிகர்கள் இலவசமாக பார்க்க முடியும் என்று கூறியுள்ளது.

மேலும் தெரிவிக்கையில், மூன்றாவது உலகக் கோப்பைப் பட்டத்தை வெல்லும் முனைப்போடு விளையாடும் அர்ஜென்டினா அணிக்கும், நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணிக்கும் இடையே இன்று ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள இறுதிப்போட்டி வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும் என்று உறுதியாக நம்புவதாகவும் beIN SPORTS நிறுவனத்தின் CEO தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இறுதிப்போட்டியை காண விரும்புவார்கள் கீழே உள்ள வீடியோவிலோ அல்லது லிங்கில் சென்றோ பார்த்துக்கொள்ளலாம் .

ADVERTISEMENT