ADVERTISEMENT

UAE: புத்தாண்டை முன்னிட்டு தனியார் துறை ஊழியர்களுக்கு விடுமுறையை அறிவித்த அரசு..!!

Published: 20 Dec 2022, 7:50 PM |
Updated: 20 Dec 2022, 9:06 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் புத்தாண்டை முன்னிட்டு விடுமுறை தினத்தை அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 1, 2023 ஞாயிற்றுக்கிழமை தனியார் துறை ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ ஊதியத்துடன் கூடிய விடுமுறையாக இருக்கும் என்று அமீரகத்தின் மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அரசு மற்றும் தனியார் துறைகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகபூர்வ விடுமுறைகள் குறித்த ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவையின் முடிவின்படி இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் அடுத்த ஆண்டில் ஆறு நாட்கள் நீண்ட விடுமுறை உட்பட, பல நீண்ட விடுமுறை நாட்களை பெறுவார்கள் என கூறப்படுகிறது. அரசாங்கத்தால் பகிரப்பட்ட ஒரு பதிவின்படி, அடுத்த ஆண்டுக்கான விடுமுறைகளின் முழு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவை:

ADVERTISEMENT

ஆங்கில புத்தாண்டு: ஜனவரி 1

ஈத் அல் ஃபித்ர்: ரமலான் 29 முதல் ஷவ்வால் 3 வரை (4 அல்லது 5 நாட்கள்)

ADVERTISEMENT

அரஃபா நாள்: துல்ஹஜ் 9

ஈத் அல் அதா: துல் ஹஜ் 10-12

ஹிஜ்ரி புத்தாண்டு: ஜூலை 21

முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்: செப்டம்பர் 29

ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம்: டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3

இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடுமுறைகள் ஹிஜ்ரி எனும் இஸ்லாமிய நாட்காட்டியை அடிப்படையாகக் கொண்டவை. எனவே பிறை பார்ப்பதைப் பொறுத்து அவற்றின் தேதிகள் மாறலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.