ADVERTISEMENT

துபாய்: சாலைகளை கண்காணிக்க 10,000 ஸ்மார்ட் கேமராக்கள்..!! புத்தாண்டை முன்னிட்டு RTA தகவல்..!!

Published: 30 Dec 2022, 5:32 PM |
Updated: 30 Dec 2022, 5:37 PM |
Posted By: admin

துபாயில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சாலைகளில் போக்குவரத்து நெரிசலுடன் மக்கள் கூட்டமும் அலைமோதும் என்பதால் சாலைகளைக் கண்காணிக்க 10,000 ஸ்மார்ட் கேமராக்கள் பயன்படுத்தப்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட் திட்டம் துபாய் காவல்துறையுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து தெரிவிக்கையில், “புத்தாண்டு கொண்டாட்டங்களை பாதுகாக்க குழு முழுமையாக தயாராக உள்ளது. 2023 புத்தாண்டின் போது சுற்றுலாப் பகுதிகள் மற்றும் வணிக மையங்களைப் பாதுகாப்பதற்கும் போக்குவரத்தை எளிதாக்குவதற்கும் பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கூட்டு மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பல ஒருங்கிணைப்பு கூட்டங்களும் நடத்தப்பட்டது” என்று துபாய் காவல்துறையின் உயர் அதிகாரி மேஜர் ஜெனரல் சைஃப் முஹைர் அல் மஸ்ரூயி தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் இடங்களில் அனைத்து பார்வையாளர்களின் சுமூகமான இயக்கத்தை உறுதி செய்வதற்காக அனைத்து மனித மற்றும் தொழில்நுட்ப வளங்களையும் குழு வரிசைப்படுத்தும் என்று அல் மஸ்ரூயி உறுதிப்படுத்தியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இனிமையான மற்றும் பாதுகாப்பான கொண்டாட்டங்களை உறுதி செய்வதற்கான முயற்சிகளை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

இவற்றுடன் சேர்த்து புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் சமயங்களில் மூடப்படும் சாலைகள் மற்றும் மெட்ரோ இயங்கும் நேரங்களையும் RTA வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

துபாய்: 43 மணி நேரம் இயங்கவிருக்கும் மெட்ரோ.. சாலைகள் மூடல்.. திட்டங்களை வெளியிட்ட RTA..