ADVERTISEMENT

புத்தாண்டை முன்னிட்டு அமீரகத்தில் 40 க்கும் மேலான இடங்களில் வான வேடிக்கை..!! எங்கெங்கே..?? முழு விபரங்களும்..!!

Published: 31 Dec 2022, 11:56 AM |
Updated: 31 Dec 2022, 12:19 PM |
Posted By: admin

புத்தாண்டு நாளை துவங்கவிருக்கும் நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதேபோல் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் அமீரகத்தில் நடைபெறவிருக்கும் முதல் புத்தாண்டு கொண்டாட்டமும் இதுவாகும். மேலும் புத்தாண்டை முன்னிட்டு அமீரகத்தில் இருக்கக்கூடிய 40க்கும் மேற்பட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டாடங்கள் வான வேடிக்கைகளுடன் நிகழ்த்தப்படவுள்ளன. அதன் முழு விபரங்களையும் இங்கே காணலாம்.

ADVERTISEMENT

அதுமட்டுமல்லாது துபாய், அபுதாபி, ராஸ் அல் கைமா ஆகிய மூன்று எமிரேட் தங்கள் வானவேடிக்கை மூலம் உலக சாதனைகளை படைக்கவும் தயாராகவுள்ளது.

அபுதாபி

அபுதாபியில் புத்தாண்டு வான வேடிக்கை நிகழ்வுகளானது மொத்தம் ஏழு முக்கிய இடங்களில் நிகழ்த்தப்பட உள்ளன. அபுதாபியின் அதிகாரப்பூர்வ சுற்றுலா வலைத்தளத்தின்படி, (visitabudhabi.ae) இந்த இடங்களில் பெரும்பாலானவை இலவசம் மற்றும் குடும்பங்களும் குழந்தைகளும் அணுக கூடியதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

1. அபுதாபி கார்னிச்

இங்கு நள்ளிரவில் வாணவேடிக்கை தொடங்கும்.

ADVERTISEMENT

2. யாஸ் பே வாட்டர்ஃபிரண்ட் (Yas Bay Waterfront)

யாஸ் பே வாட்டர்ஃபிரண்டில் முதல் வாணவேடிக்கை இரவு 9 மணிக்கும், இரண்டாவது வாணவேடிக்கை நள்ளிரவு 12 மணிக்கும் நடைபெறும்.

3. அல் மரியா ஐலேண்ட் (Al Maryah Island)

அல் மரியா ஐலேண்டில் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் தொடங்கி 10 நிமிடங்களுக்கு வானவேடிக்கை பார்வையாளர்களை மகிழ்விக்கும்.

4. ஷேக் சையத் ஃபெஸ்டிவல் (Sheikh Zayed Festival)

அல் வத்பாவில் உள்ள ஷேக் சையத் ஃபெஸ்டிவலில் புத்தாண்டிற்காக 40 நிமிடங்களுக்கு நடத்தப்படும் மிகப்பெரிய வானவேடிக்கை நிகழ்ச்சியானது மூன்று கின்னஸ் உலக சாதனைகளை முறியடிக்கும். அத்துடன் ட்ரோன் ஷோ, ஃபவுண்டைன் டான்ஸ் மற்றும் நேரடி இசை நிகழ்ச்சி ஆகியவையும் இருக்கும்.  கொண்டாட்டங்கள் பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கும், மேலும் புத்தாண்டு வானவேடிக்கைகள் நள்ளிரவில் தொடங்கும்.

5. ஹஸ்ஸா பின் சையத் ஸ்டேடியம் (Hazza Bin Zayed Stadium)

அல் அய்னிப் உள்ள ஹஸ்ஸா பின் சயீத் ஸ்டேடியம் நள்ளிரவில் வானவேடிக்கை நிகழ்ச்சியை நடத்தும்

6. மதீனத் சையத் (Madinat Zayed)

அல் தஃப்ரா பகுதியில் உள்ள மதீனத் சயீத், வானவேடிக்கை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த புத்தாண்டு கொண்டாட்டம் நள்ளிரவில் தொடங்கும். மதீனத் சயீதைத் தவிர, அல் தஃப்ரா பிராந்தியத்தில் புத்தாண்டு வானவேடிக்கைகள், லிவா, கயாதி மற்றும் அல் மிர்ஃபா கடற்கரையில் உள்ள தால் மோரேப் ஆகிய இடங்களிலும் நடைபெறும்.

7. சாதியத் பீச் கிளப் (Saadiyath Beach Club)

சாதியத் பீச் கிளப்பில் புத்தாண்டிற்காக சிறப்பு வானவேடிக்கைகள் நிகழ்த்தப்படும். இருப்பினும், இதனை அணுக முன்கூட்டியே முன்பதிவு செய்ய வேண்டும்.

துபாய்

துபாயில் புத்தாண்டைக் கொண்டாட 30 க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. புர்ஜ் கலீஃபா மற்றும் துபாய் ஃபிரேம் போன்ற முக்கிய இடங்கள் மற்றும் கோல்ஃப் கிளப்புகள் போன்றவை இதில் அடங்கும்.

முக்கிய இடங்கள்:

1. புர்ஜ் கலிஃபா

2. துபாய் ஃபிரேம்

3. புளூவாட்டர்ஸ்

4. தி பீச், JBR

5. புர்ஜ் அல் அரப்

துபாய் ஷாப்பிங் ஃபெஸ்டிவல் (DSF) மற்றும் துபாய் நாட்காட்டியின் அறிவிப்பின்படி, வானவேடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேறு சில இடங்களின் விபரங்களும் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.

கோல்ஃப் கிளப்புகள்

1. ஜுமேரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் கோல்ஃப் & கன்ட்ரி கிளப் (Jumeirah Golf Estates Golf & Country Club)

2. எமிரேட்ஸ் கோல்ஃப் கிளப் (Emirates Golf Club)

3. மாண்ட்கோமரி கோல்ஃப் கிளப் துபாய் (Montgomerie Golf Club Dubai)

4. அரேபிய ராஞ்சஸ் கோல்ஃப் கிளப் (Arabian Ranches Golf Club)

5. டாப்கோல்ஃப் துபாய் (Topgolf Dubai)

கிளப்புகள் அல்லது பார்ட்டிகள்:

6. பாம் வெஸ்ட் பீச் (Palm West Beach)

7. கிளப் விஸ்டா மேர் (Club Vista Mare)

8. நிக்கி பீச் ரிசார்ட் & ஸ்பா துபாய் (Nikki Beach Resort & Spa Dubai)

9. ஒன் & ஒன்லி ராயல் மிராஜ் (One & Only Royal Mirage)

10. ஜேஏ பீச் ஹோட்டல் – ஜெபல் அலி (JA Beach Hotel — Jebel Ali)

11. Le Royal Meridien Beach Resort

12. ஒன் & ஒன்லி தி பாம் (One & Only The Palm)

13. Sofitel Dubai The Palm

14. பலாஸ்ஸோ வெர்சேஸ் துபாய் (Palazzo Versace Dubai)

15. பார்க் ஹயாத் துபாய் (Park Hyatt Dubai)

16. பல்கேரி ரிசார்ட் துபாய் (Bulgari Resort Dubai)

17. ஃபோர் சீசன்ஸ் ரிசார்ட் துபாய், ஜுமேரா கடற்கரை (Four Seasons Resort Dubai, Jumeirah Beach)

குடும்ப பொழுதுபோக்கு இடங்கள்

18. துபாய் க்ரீக் (Dubai Creek)

19. அல் சீஃப் (Al Seef)

20. குளோபல் வில்லேஜ்

21. துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ் (Dubai Parks and Resorts)

22. துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால்

23. Town Square by Nshama

ஓய்வு விடுதி மற்றும் முகாம்கள் (Resorts and camps)

24. பாப் அல் ஷம்ஸ் டெஸர்ட் ரிசார்ட் (Bab Al Shams Desert Resort)

25. அல் கைமா டெஸர்ட் கேம்ப் (Al Khayma Desert Camp).

ஷார்ஜா

ஷார்ஜா முதலீடு மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Shurooq), ஷார்ஜா வர்த்தகம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்துடன் இணைந்து பின்வரும் இடங்களில் வான வேடிகைகளை நிகழ்த்தும் என்று அறிவித்துள்ளது. அவை:

1. ஷார்ஜாவில் அல் மஜாஸ் வாட்டர்ஃப்ரண்ட் (Al Majaz Waterfront)

அல் மஜாஸ் வாட்டர்ஃபிரண்ட் புத்தாண்டை முன்னிட்டு 8 நிமிட வானவேடிக்கையை நிகழ்த்தும். டிசம்பர் 31, 2022 அன்று இரவு 7.45 மணி முதல் பிற நிகழ்ச்சிகளும் இந்த இடத்தில் ஏற்பாடு செய்யப்படும். மேலும் அல் நூர் ஐலேண்டில் இருந்தும் இந்த வான வேடிக்கைகளை கண்டு களிக்கலாம்.

2. கோர்ஃபக்கன் பீச்

கோர்ஃபக்கன் பீச்சில் புத்தாண்டு தினமானது  LED, மற்றும் வான வேடிக்கைகளுடன் இன்று இரவு 7.45 மணி முதல் குடும்பங்கள் மற்றும் குழந்தைகளுக்காக தொடங்கும்.

அஜ்மான்

அஜ்மானின் சுற்றுலா மேம்பாட்டுத் துறை, அஜ்மான் கார்னிச்சில் புத்தாண்டையொட்டி சிறப்பு வான வேடிக்கைகளை நிகழ்த்தவுள்ளது. இந்த நிகழ்ச்சி ஐந்து நிமிடங்கள் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் அனைத்து பார்வையாளர்களும் இலவசமாக பார்க்கலாம்.

ராஸ் அல் கைமா

ராஸ் அல் கைமா ‘மிக ரிமோட் ஆபரேட்டட் மல்டிரோட்டர்கள்/டிரோன்கள் ஒரே நேரத்தில் பட்டாசுகளை ஏவுதல்’ என்ற உலக சாதனையை முறியடிக்க முயற்சிக்கும், மேலும் ‘மல்டிரோட்டர்கள்/ட்ரோன்களால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய வான்வழி வாக்கியம்’ என்ற புதிய உலக சாதனையை அமைக்கும். அல் மர்ஜான் ஐலேண்ட் மற்றும் அல் ஹம்ரா வில்லேஜிற்கு இடையே உள்ள வாட்டர்ஃப்ரண்டில் 4.7 கிமீ நீளத்தில் புதிய உலக சாதனையை படைக்கும் வண்ணம் வான வேடிக்கை நிகழ்த்தப்படும். இருப்பினும், இதனை அணுக பெரியவர்களுக்கு 10 திர்ஹம் டிக்கெட் வாங்க வேண்டும், அதே நேரத்தில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக நுழையலாம்.

ஃபுஜைரா

ஃபுஜைராவில் புதிதாக உருவாக்கப்பட்ட அம்ப்ரெல்லா பீச்சில் (umbrella beach) புத்தாண்டை முன்னிட்டு  நள்ளிரவில் வான வேடிக்கை நிகழ்த்தப்படும்.