ADVERTISEMENT

“புத்தாண்டு அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும்”.. மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்த அமீரக அதிபர்..!!

Published: 1 Jan 2023, 6:56 PM |
Updated: 1 Jan 2023, 6:59 PM |
Posted By: admin

புத்தாண்டை முன்னிட்டு அனைவரும் வாழ்த்துகளை பகிர்ந்து வரும் நிலையில் ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும் புத்தாண்டு வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் கூறுகையில் “நாங்கள் ஒரு தேசமாக எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறோம். மேலும் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை ஒன்றாக உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை புதுப்பிக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக மக்கள் மற்றும் உலகின் பிற மக்களுக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் கொண்டு வரும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதே போல் துபாயின் இளவரசர் மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் கூறுகையில் “எங்கள் அன்புக்குரிய தேசத்தின் தலைமை மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள். புத்தாண்டு உலகிற்கு அதிக அமைதி மற்றும் நல்வாழ்வைக் கொண்டுவரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

 

ADVERTISEMENT