ADVERTISEMENT

புத்தாண்டு கொண்டாட்டத்தை நேரில் பார்வையிட்ட அமீரக ஜனாதிபதி..!! சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ..!!

Published: 2 Jan 2023, 1:04 PM |
Updated: 2 Jan 2023, 1:07 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வெகு விமரிசையாக புத்தாண்டு கொண்டாடப்பட்ட நிலையில் அமீரக ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், சனிக்கிழமையன்று நடைபெற்ற அபுதாபியின் புத்தாண்டு கொண்டாட்டங்களை வான்வழியாக பார்வையிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமை பல்வேறு தளங்களில் வைரலான இந்த வீடியோ, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஹெலிகாப்டரின் காக்பிட்டில் அமர்ந்து கொண்டாட்டங்களைக் கண்காணிப்பதைக் காட்டுகிறது.

அந்த வீடியோவில் அபுதாபியில் கார்னிச் மற்றும் அல் வத்பாவில் இருக்கும் ஷேக் சையத் ஃபெஸ்டிவலில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களை அவர் பார்வையிடுகிறார்.

ADVERTISEMENT

புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அபுதாபியின் ஷேக் சையத் ஃபெஸ்டிவலில் நடத்தப்பட்ட வானவேடிக்கையானது அதன் அளவு, உருவாக்கம் மற்றும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் மூன்று கின்னஸ் சாதனைகளை முறியடித்தது. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த மிகப்பெரிய வானவேடிக்கையானது 40 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது. அத்துடன் 3,000 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் அல் வத்பாவின் வானத்தில் ட்ரோன் ஷோக்கள் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT