ADVERTISEMENT

UAE: வரும் ஜனவரி 23ல் இருந்து பேருந்து கட்டண முறையில் மாற்றம்.. அஜ்மான் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு..!!

Published: 4 Jan 2023, 7:27 PM |
Updated: 4 Jan 2023, 8:38 PM |
Posted By: admin

அஜ்மான் போக்குவரத்து ஆணையமானது அஜ்மானில் இயங்கக்கூடிய பேருந்துகளின் கட்டண முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி 23, 2023 முதல், பேருந்து கட்டணங்கள் பணமாகவோ அல்லது மஸ்ஸார் கார்டு மூலமாகவோ ஒருங்கிணைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனடிப்படையில் துபாய் செல்லும் பேருந்துகளைத் தவிர மற்ற அனைத்து பேருந்துக் கட்டணங்களும் ஜனவரி 23ஆம் தேதி முதல் மாற்றப்படும் என்று போக்குவரத்து ஆணையத்தின் கால் சென்டர் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Massar கார்டு என்பது பொதுப் பேருந்துகளுக்கான அஜ்மானின் கட்டண அட்டை ஆகும். இந்த கார்டுகளை ஆன்லைனிலோ அல்லது பேருந்து நிலையங்களுக்கு சென்றோ டாப் அப் செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் கட்டண மாற்ற முறையின் படி கார்டை வைத்திருக்கும் பயணிகளும் பணமாக கட்டணம் செலுத்தும் பயணிகளைப் போன்றே அதே கட்டணத்தை செலுத்துவார்கள் என கூறப்பட்டுள்ளது. அதாவது தற்போது வரை, ​​பேருந்து கட்டணம் மஸ்ஸர் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 3 திர்ஹம் ஆகவும், பணமாக செலுத்துமவர்களுக்கு 5 திர்ஹம் ஆகவும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதலாக, மஸ்ஸார் கார்டு வைத்திருக்கும் மாணவர்களுக்கு 30 சதவீத தள்ளுபடியை ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மாணவர்களை பொதுப் பேருந்துகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டு அறிவிக்கப்பட்டதாக ஆணையமும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

Massar கார்டுக்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும்?

1. ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு (www.ta.gov.ae) சென்று விண்ணப்பிக்கலாம்

2. ஷேக் அப்துல்லா பின் ரஷித் அல் நுவைமி ஸ்ட்ரீட்டில் உள்ள அஜ்மான் மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை

அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, Massar Card Request என்பதைத் தேர்ந்தெடுக்கவும்

எமிரேட்ஸ் ஐடி விவரங்களை உள்ளிட்டு விண்ணப்பப் படிவத்திற்குச் செல்லவும்

விவரங்களைப் பூர்த்தி செய்து ஆவணங்களைப் பதிவேற்றவும்

எமிரேட்ஸ் ஐடி மற்றும் சமீபத்திய புகைப்படத்தின் நகலை பதிவேற்றவும்

விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

விண்ணப்பம் ஏற்றுக்கொண்ட பின்னர் பதிவு செய்யப்பட்ட ஈமெயில் ஐடிக்கு உறுதிப்படுத்தலுக்கான ஈமெயில் அனுப்பப்படும்

இந்த ஈமெயிலை பிரிண்ட் எடுத்துக் கொண்டு அஜ்மான் மத்திய பேருந்து நிலையத்தைப் பார்வையிடவும்

பணம் செலுத்தி உங்கள் மஸ்ஸார் கார்டைப் பெற்றுக்கொள்ளலாம்

மத்திய பேருந்து நிலையத்தில் விண்ணப்பிக்கும் முறை

கவுண்டரில் எமிரேட்ஸ் ஐடி மற்றும் பிற ஆவணங்களை வழங்கவும்

பணம் செலுத்திய பிறகு அட்டையைப் பெற்று, உங்கள் தேவைகளுக்கு ஏற்ப கட்டணம் செலுத்திக் கொள்ளலாம்

Massar கார்டின் விலை

ஒரு Massar கார்டின் விலை 25 திர்ஹம் ஆகும்.

ஒரு புதிய Massar கார்டானது 20 திர்ஹம் பேலன்ஸைக் கொண்டிருக்கும்.