ADVERTISEMENT

அமீரகத்தில் வெள்ளம், சாலைகளில் பாய்ந்தோடும் மழைநீர்: குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்..!!

Published: 6 Jan 2023, 6:30 PM |
Updated: 6 Jan 2023, 6:40 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே குளிர்ச்சியான வானிலையுடன் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. அதனொட்டி அமீரகத்தின் சில பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) பெய்த கனமழையால் நாட்டில் உள்ள பல பள்ளத்தாக்கு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையமானது (NCM) இன்று அமீரகத்தில் ஏற்பட்ட கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள் மற்றும் மலைகளில் இருந்து நீர்வீழ்ச்சிகள் போல மழைநீர் போன்றவற்றைக் காட்டும் வீடியோக்களை வெளியிட்டுள்ளது. அத்துடன் அமீரகத்தில் பெய்த கனமழையால் ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

இவ்வாறான சமயங்களில் மழையின் போது வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை பொதுமக்கள் தவிர்க்குமாறு அதிகாரிகள் பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர். இருப்பினும் ஒரு சில வாகன ஓட்டிகள் அதிகாரிகள் எச்சரித்தும் இவ்வாறான பகுதிகளில் உள்ள சாலைகளில் வாகனங்களை ஓட்டுவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) பகிர்ந்த பல வீடியோக்கள், வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் குடியிருப்பாளர்கள் தங்கள் வாகனங்களை ஓட்டிச் செல்வதைக் காட்டுகின்றன, அங்கு மழையின் காரணமாக வேகமாக ஓடும் நீரில் இவர்கள் அடித்துச் செல்லப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். எனவே கவனத்துடன் குடியிருப்பாளர்கள் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் இன்னும் ஒரு சில நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை பெய்யும் என்றும் முன்னறிவிப்பாளர்கள் கணித்துள்ளனர். இந்த வானிலையானது வார இறுதி முழுவதும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.