ADVERTISEMENT

முசந்தத்தில் இன்று பதிவான நிலநடுக்கம்.. அமீரகத்தின் தேசிய நில அதிர்வு மையம் தகவல்..!!

Published: 31 Jan 2023, 2:28 PM |
Updated: 31 Jan 2023, 3:55 PM |
Posted By: admin

முசந்தத்தில் ரிக்டர் அளவுகோலில் 2.1 என்ற அளவில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 12:24 மணிக்கு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது என அமீரகத்தின் தேசிய நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும் 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தை மக்கள் உணரவில்லை என்றும், இதனால் நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கங்கள் குறித்து முன்னர் ஒரு அதிகாரி தெரிவிக்கையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அண்டை நாடுகளில் ஏற்படும் சிறிய நிலநடுக்கங்களால் அமீரகமும் ஒரு வருடத்தில் அவ்வப்போது சிறிய வகையிலான  நிலநடுக்கங்களை எதிர்கொள்கின்றது. ஆனால் அவை அமீரகத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, கவலைப்பட ஒன்றுமில்லை என்று தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

அத்துடன் நிலநடுக்கத்தை உணரும்போதெல்லாம் மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும், வீட்டிலோ அல்லது வெளியிலோ பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும் அதிகாரி அறிவுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.