ADVERTISEMENT

நாளை துபாய் மெட்ரோ இயங்கும் நேரம் நீட்டிப்பு.. RTA தகவல்..!!

Published: 11 Feb 2023, 2:55 PM |
Updated: 11 Feb 2023, 3:09 PM |
Posted By: admin

துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் வரும் பிப்ரவரி 12 (நாளை) துபாய் மெட்ரோ இயங்கக்கூடிய நேரம் நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதன்படி    ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம் போல் காலை 8 மணிக்குப் பதிலாக அதிகாலை 4 மணிக்கு மெட்ரோ இயங்கத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நாளை நடைபெறும் துபாய் மாரத்தான் போட்டியே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளும் பங்கேற்பாளர்கள் துபாய் எக்ஸ்போ சிட்டிக்கு எளிதாகவும் சுமுகமாகவும் அணுகுவதை உறுதி செய்வதே மெட்ரோ இயக்க நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக RTA தெரிவித்துள்ளது.

துபாய் மராத்தான் 2023 இல் சிரமம் இல்லாத பங்கேற்பை அனுபவிக்க பொதுப் போக்குவரத்தை சிறந்த முறையில் பயன்படுத்துமாறு குடியிருப்பாளர்களை RTA ஊக்குவித்துள்ளது.

ADVERTISEMENT

மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு, 42.195 கிமீ பந்தயம் நாளை காலை 6 மணிக்குத் தொடங்கும் என்றும் அதே நேரத்தில் 10 கிமீ சாலைப் பந்தயம் மற்றும் 4 கிமீ வேடிக்கை ஓட்டம் முறையே காலை 8 மணி மற்றும் 11 மணிக்கு ஆரம்பமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.