ADVERTISEMENT

ஓமானில் அடுத்த வாரம் வரவிருக்கும் பொது விடுமுறை.. அறிவிப்பை வெளியிட்ட தொழிலாளர் அமைச்சகம்..!!

Published: 13 Feb 2023, 11:09 AM |
Updated: 13 Feb 2023, 11:09 AM |
Posted By: admin

ஓமானில் வரக்கூடிய அல் இஸ்ரா வல் மிராஜை (Al Isra’a Wal Miraj) முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுவதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் பிப்ரவரி 19, 2023 அன்று அரசு துறை அலுவலகங்களுக்கும் அதே போல் தனியார் துறை நிறுவனங்களுக்கும் அதிகாரப்பூர்வ விடுமுறையாக இருக்கும் என்று தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும் ஊழியர்களின் பணியின் தன்மை காரணமாக அவர்களின் வேலை அவசியமாகக் கருதப்பட்டால், அந்த விடுமுறையில் ஊழியர்களை ஈடுபடுத்துவதற்கான விதிமுறைகளை முதலாளிகள் ஏற்றுக்கொள்ளலாம் என்றும் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.