ADVERTISEMENT

UAE: ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு 50% வரை தள்ளுபடி..!! ரமலான் மாதத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு…!!

Published: 22 Feb 2023, 8:45 PM |
Updated: 22 Feb 2023, 8:50 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் துவங்க இன்னும் ஏறக்குறைய ஒரு மாதமே இருக்கும் நிலையில் ரமலானை முன்னிட்டு பெரும்பாலான சில்லறை விற்பனையாளர்கள், ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

வானியல் கணக்கீடுகளின்படி, ரமலான் மாதமானது ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், ரமலான் மாத முடிவைக் குறிக்கும் வகையில் ஏப்ரல் 21 அன்று ஈத் அல் பித்ர் நாளாக கொண்டாடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் Majid Al Futtaim-க்கு சொந்தமான சில்லறை நிறுவனமான Carrefour, சுமார் 6,000 க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு 50 சதவீம் வரையிலான தள்ளுபடியை பிப்ரவரி 21 முதல் அறிமுகப்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட ஆறு வாரங்களுக்கும் மேல் நீடிக்கும் இந்த சலுகையானது, மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் பொருள்கள், சர்வதேச பிராண்டுகளின் பிரத்தியேக சலுகைகள் மற்றும் அதன் சொந்த தனிப்பட்ட லேபிளில் தள்ளுபடிகள் ஆகியவற்றில் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து Carrefour நிறுவனத்தின் வர்த்தக மற்றும் செயல்பாடுகளின் தலைவர் கிறிஸ்டோஃப் ஆர்செட் அவர்கள் கூறுகையில், எமிரேட்ஸ் ரெட் கிரசென்ட் நிறுவனத்துடன் இணைந்து, ரமலான் மாதத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் நிறைந்த ”Ramadan Boxes” உதவி தேவைப்படுபவர்களுக்கு விநியோகிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோலவே, ‘Emirati Fresh Festival’ என்பதன் கீழ் அருகில் உள்ள பண்ணைகளில் இருந்து கிடைக்கும் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கு 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து அல் ஆதில் டிரேடிங்கின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் தனஞ்சய் தாதர் அவர்கள், புனித மாதத்தில் இஸ்லாமிய சமூகத்தை ஆதரிக்கும் நிறுவனத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தள்ளுபடியை வழங்குகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும், நிறுவனத்தின் ப்ரோமோஷன் மற்றும் தள்ளுபடிகளானது ரமலான் மாதம் ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு தொடங்கி ரமலான் முடிந்து சில நாட்களுக்குப் பிறகு வரை, மொத்தமாக 45 நாட்களுக்கு செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, சுமார் 400க்கும் மேற்பட்ட தயாரிப்புகளுக்கு இந்த ஆண்டு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், அரிசிப் பொடி, உளுந்து, சர்க்கரை, பழச்சாறுகள், சிரப்கள் மற்றும் புதிய காய்கறிகள் போன்ற நோன்பு இருப்பவர்கள் அதிகம் உட்கொள்ளும் பொருட்களுக்கு சிறந்த தள்ளுபடியை வழங்குவதாகவும் கூறிய டாக்டர் தாதர், செழிப்பான விளைச்சல் மற்றும் குறைந்த சரக்குக் கட்டணம் போன்றவற்றினால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரமலான் கொண்டாட்டத்தில் சலுகைகள் சிறந்த விலையில் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிடைத்துள்ள தகவலின்படி, எதிர்வரும் மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து அல் மாயா சூப்பர்மார்க்கெட் பானங்கள், ஃப்ரோஸன் உணவுகள் மற்றும் பிற மளிகைப் பொருட்கள் உட்பட 480 க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு 45 நாட்கள் வரையிலான ப்ரோமோஷன்கள் மற்றும் தள்ளுபடிகளை அறிமுகப்படுத்த உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அல் மாயா குழுமத்தின் பார்ட்னர் மற்றும் குழு இயக்குனருமான கமல் வச்சானி அவர்கள் அமீரகம் முழுவதும் உள்ள ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகளில் பல்வேறு வகையான ரமலான் ப்ரோமோஷன்களை அறிவிக்க உள்ளன என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், Pre-Ramadan, Ramadan One மற்றும் Ramadan Two ஆகிய ப்ரோமோஷன்களை இந்த நிறுவனம் வடிவமைத்துள்ளதாகவும், அவற்றை மார்ச் 1, 2023 முதல் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, புதிய தயாரிப்புகள், இறைச்சி, கோழி மற்றும் சமையலறை உபகரணங்கள் போன்றவற்றிலும் வாடிக்கையாளர்கள் சிறந்த தள்ளுபடிகளைப் பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.